Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈழத் தமிழர்கள் வாழ்வு மலர வள்ளலார் மறைந்த மேட்டுக்குப்பத்தில் சிறப்பு வழிபாடு (படங்கள்)


ஈழத் தமிழர்கள் வாழ்வு மலர வள்ளலார் மறைந்த மேட்டுக்                  குப்பத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் நினைவேந்தல்



இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் ஈழத் தமிழர்களுக்கு இன்னும் அவர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட வில்லை. அவர்கள் வாழ்வில் இருள் நீங்கி அவர்கள் இழந்த உரிமைகள் , நிலங்கள் அனைத்தும் திரும்பக் கிடைக்கப் பெற்று அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து வள்ளலார் மறைந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் சிறப்பு மகாமந்திர வழிபாடு செய்யப்பட்டது. முதல் முறையாக இங்கு இவ்வாறான வழிபாடு நடந்தது. சன்மார்க்க சங்கத்தை சார்ந்த சுமார் ஆயிரம் மக்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு ஒற்றை குரலில் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடத்தில் கோரிக்கை வைத்தனர். மேலும் இறந்த ஈழத்து உறவுகளுக்கு மெழுகுத் திரி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இரவு 11 மணியில் இருந்து 12 மணிவரை தொடர் 'அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை ' என்ற மகாமந்திர ஓதல் நடைபெற்றது. தமிழர் பண்பாட்டு நடுவம் இந்த சிறப்பு வழிபாட்டிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தது. மேலும் ஆயிரக்கணக்கான வள்ளலார் படம் பொருந்திய 'வாழ்க தமிழ், தமிழராய் இணைவோம்' என்ற பசை ஒட்டிகளும் மக்களுக்கு வழங்கப்பட்டது. வள்ளலார் வழி காட்டிய சன்மார்க்க சங்கத்தை சார்ந்த பக்தர்கள் பலரும் ஈழப் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என உருக்கமுடன் பிரார்த்தனை செய்தனர்.



























































[vuukle-powerbar-top]

Recent Post