Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


டெல்லியில் போராட்டம் நடத்தும் பெண்கள் குறித்து, ஜனாதிபதி மகனும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஜித் முகர்ஜி கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இரவு நாட்டியமான டிஸ்கொவுக்கு சென்று நடனமாடிவிட்டு, ஒப்பனை கலையாமல் இந்தியா கேட்டுக்கு வந்து அந்தப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக, மேற்குவங்க மாநில நிகழ்ச்சி ஒன்றில் அபிஜித் தெரிவித்தார். இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடும் பெண்களுக்கு, அடித்தட்டு மக்களுடன் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் போராட்டம் நடத்துவது தற்போது நாகரீகமாக மாறிவருவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

தொலைக்காட்சிகளில் தாங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பேட்டி கொடுப்பதாகவும் அபிஜித் கூறினார். அபிஜித்தின் இத்தகைய கருத்துகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தது. இதையடுத்து பெண்களை அவமதிக்கும் நோக்கத்துடன் தாம் எதனையும் கூறவில்லை என்றும், அவ்வாறு பேசியிருந்தால் அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாகவும், தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அபிஜித் தெரிவித்துள்ளார்.


[vuukle-powerbar-top]

Recent Post