Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெல்லி மாணவிக்கு தலைவர்கள் இரங்கல். தமிழ் பெண்களை பற்றி கவலையில்லை


கூடங்குளம் பகுதிக்கு தடையின்றி வந்து செல்லலாம்! அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இடிந்தகரை 627 104 திருநெல்வேலி மாவட்டம் டிசம்பர் 29, 2012 டிசம்பர் 30, 31, சனவரி 1, 2013 ஆகிய நாட்களில் “விடுதலையை நிலைநிறுத்துவோம், எதிர்ப்பைக் கொண்டாடுவோம்” எனும் நிகழ்வினை இடிந்தகரையில் நடத்துகிறோம். இந்த நிகழ்வுக்கு அனைவரும் தங்கு தடையின்றி வந்து செல்லலாம் என்பதை தற்போது உறுதி செய்திருக்கிறோம். “இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் எனது அடிப்படை கடமையை கோட்பாடு 51 (A)-ன் படி செய்வதற்கும், இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 19(1)-ன் படி எனக்கு அடிப்படை உரிமையாக இருப்பதால் நான் யாரிடமேனும் அனுமதி பெற்றுத்தான் கூடங்குளம் பகுதிக்கு வரவேண்டுமா என்பது பற்றிய தகவல் தருக” என்று நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேள்வி கேட்டோம். “கூடங்குளம் பகுதிக்குள் பொதுமக்கள் வருவதற்கு .யாரிடமும் எவ்வித அனுமதியும் பெற தேவையில்லை” என்று கூடங்குளம் காவல் ஆய்வாளர், வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (குற்றம்) ஆகியோர் தங்கள் 20.10.2012, 30.11.2012 கடிதங்கள் வழி எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளனர். (விடுதலையை எப்படியெல்லாம் நிலைநிறுத்தவேண்டியிருக்கிறது?) எனவே வாருங்கள் தோழர்களே! “விடுதலையை நிலைநிறுத்துவோம், எதிர்ப்பைக் கொண்டாடுவோம்”! ’ போராட்டக் குழு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
[vuukle-powerbar-top]

Recent Post