Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெ‌ல்‌லி‌யி‌ல் பாலியல் வ‌ன்கொடுமையால் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட மருத்துவ கல்லூரி மாணவி மரண‌த்‌திற்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ஐ. நா.பொதுச் செயலர் பான் ‌கீ மூன், பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்போதும் ஏற்றுகொள்வதோ அல்லது மன்னிப்பதோ கூடாது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். 

இது தொட‌‌ர்பாக அவர் வெளியிட்டுள்ள இர‌ங்க‌ல்செ‌ய்‌தி‌யி‌ல், மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும், இந்த மிருகத்தனமான செயலை கண்டிப்பதாகவும் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். அவர் மேற்கொண்டு, இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த வேண்டும் எனவும் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ஈழத்தில் நடைபெற்ற இனப்போரில் ஆயிரக்கணக்கான பெண்கள் சிங்களப் படையினரால் வன்கொடுமை செய்து கொடூரக் கொலை செய்யப்பட்டனர். அப்போது பொறுப்பிலிருந்தும் அதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காத அவர் டெல்லி சம்பவத்திற்கு மற்றும் பொங்கி எழுந்திருப்பதும், இரங்கல் தெரிவித்திருப்பதும் வேடிக்கையாக உள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் சொல்லும் கூற்றுப் படியே பார்த்தாலும், தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொடூரமாகக் கொலை செய்த இலங்கை அரசாங்கத்தையும் ஐ.நா., சபையின் முன் நிறுத்த பான் கீ மூன் முன்வருவாரா என்றும் தமிழ் உணர்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post