Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ரசிகர்களை வைத்து அரசியல் செய்யும் தமிழக நடிகர்கள். விழித்துக் கொள்வார்களா மக்கள் ? 

இக்கட்டுரை தமிழக நடிகர்களும் , அவர்களை நம்பி ஏமாறும் ரசிகர்கள் மற்றும் அவர்களை வைத்து பிழைப்பு நடத்த துடிக்கும் அரசியல் வாதிகளை பற்றி அலசும் ஒரு ஆய்வுக் கட்டுரை. 

நடிகர்களும், மனிதர்களே. அவர்களும் அரசியலில் ஈடுபட முழு உரிமையுண்டு. அதை நான் தடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கும் நடிகர்களில் எத்தனை பேர் , எஸ் எஸ் அர் அவர்களைபோலும், பொன் மன செம்மல் அவர்களை போலும் வாழ்ந்து கொண்டு இருகிறார்கள். 

அரசியலில் ஈடுபடுவது , எதற்காக என்பது அவர்களுகே தெரிய வாய்ப்பில்லை. ஏதோ, அதிசயமாக எதிர் கட்சி தலைவராக இருந்து கொண்டு இருக்கும் விஜய்காந்துக்கு, அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது? உண்மையிலே இவர் நாட்டுக்காக,  மக்கள் சேவை செய்வதற்காக தான் வந்தார் என்றால் இவர் ஏன் தனது 'திருமண மண்டபத்தை' மக்கள் உபயோகத்திற்கு அற்பனிக்கவில்லை. கோயம்பேடு மேம்பாலம் கட்டும் போது இவரது திருமண மண்டபம் தடையாக இருந்த போது  நாட்டின்  வளர்ச்சிக்கு தேவை படும்பொழுது ஏன் அவருக்கு தனது மண்டபத்தை கொடுக்க  மனம்  வரவில்லை. அரசாங்கம் இவரது திருமண மண்டபத்தை இலவசமாக கேட்க வில்லை, சாமானிய மக்களுக்கு கொடுக்கும்  நஷ்ட ஈட்டை விட பல மடங்கு பெற்றவர் தான் விஜய் காந்த.  ஆனால் அதையும் பிரச்சனை செய்து அரசியல் லாபம் அடைந்தவர் தான் இந்த விஜய் காந்த .

அடுத்ததாக நடிகர் விஜய். அவர் தான் நடித்த 'காவலன்' படத்தை வெளியிடுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தி மு க வை ஒழிக்க வேண்டும் என்று தான் இன்று அரசியலில் வர துடித்து கொண்டு இருக்கிறார். ஏன் அவர் திமுக ஆட்சியில்  இருக்கும் பொழுது திமுகவை எதிர்த்து குரல் கொடுத்து இருந்திருக்க வேண்டியது தானே?  தி மு க ஆட்சியின் போது , விஜய் டிவி யில் ஒரு நிகழ்ச்சியில், சன் டிவி பற்றி கூட நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக சொல்லி தனது வீரத்தை பறைசாற்றி கொண்டவர் தான் இந்த விஜய்'. 

இவருடைய நிலத்தையும், அரசாங்கம் நாட்டு வளர்ச்சிக்கு எடுத்துகொள்ளும் பொழுது, அவருக்கும் பொறுக்க வில்லை, பார்க்க வேண்டியவர்களை பார்த்து , தனது நிலத்திருக்கு பதிலாக சென்னையிலே இடத்தை பெற்றவர் தான் இந்த விஜய். இந்த நஷ்ட ஈடு சாமானிய மக்களுக்கு கொடுக்குமா நமது அரசாங்கம் ? 5 வருடத்திற்கு முன்பு, நெற்றி கண், எனும் பத்திரிகை மீது நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்தார்.  அதில் தான் ஒரு படத்திருக்கு, 50 லகரம் சம்பளம் பெறுவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவர் எந்த காலத்திலும் 50 லகரம் சம்பளம் பெற்றது இல்லை . இது திரை துறையில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும், அப்படி அவர் 50 லகரம் சம்பளம் தான் பெறுகிறார் என்று சொன்னால்,  அவரை வைத்து 10 படங்கள் தயாரிக்க தயாராக உள்ளனர் பல தயாரிப்பாளர்கள். 

அடுத்ததாக ரஜினி, 96 களில் இவர் குரல் கொடுத்து தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது என்று கூறுவது மிகவும் அபத்தமானது. மீடியாவை அப்படி நம்ப வைத்து , அதில் அவர் லாபம் அடைவது தான் அவர் நோக்கம். அப்பொழுது  சுமார் 2 கோடிகளில் சம்பளம் பெற்று கொண்டு இருந்த ரஜினிக்கு அதற்கு பிறகு அவர் பெற்ற சம்பளம், ஆசியா நடிகர் ஜாக்கி சான் அவர்களின் சம்பளத்தை விட இவர் பெற்ற சம்பளம் தான் அதிகம், (ஜாக்கி சான் சம்பளம், சுமார் 6 மில்லியன் டாலர், தோரயமாக 32 கோடி). இவர் நாட்டு மக்களுக்காக என்ன செய்தார், இவர் நடிப்பு வாழ்கையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சுமந்து கொண்டு இருக்கும் இவர் பொது வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டாராக இருக்க தவறியது ஏன்?  தனது சொந்தப்  பிரச்சனைக்கு தவறாமல் ஆட்சி யாளர்களுக்கு நேரிடையாகவோ , மறை முகம்மாகவோ , தங்களது ரசிகர்களை உசுப்பி விட்டு அழுத்தம் கொடுக்க தெரிந்த இவர்களுக்கு , ஈழ பிரச்சனைக்கு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை முடித்து கொண்டது ஏன், அதற்கு பிறகு ரசிர்களை வைத்து அழுத்தம் கொடுகாதது ஏன்? 

அடுத்தது கருணாஸ், அவரை பல வருடங்களாக நன்கு அறிந்தவன்.  மேடை பாடகராக இருக்கும்பொழுது , அவருடைய உழைப்பு அபரிதமானது. இதை அருகில் இருந்து பார்த்தவன் நான். வேறு யாராக இருந்தால் இவருடைய வளர்ச்சியில் 10 வருடங்கள் பின் நோக்கி தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட உழைப்பு அவருடையது. ஆனால் சமீப காலமாக அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் அவர் சார்ந்த சமூகத்தை நோக்கி தான் உள்ளது. அவருக்கு அவர் சார்ந்த சமூக உணர்வு இருக்க வேண்டும் என்பதில் தவறு இல்லை. ஆனால் இவரை போல் பொது வாழ்கையில் இருப்பவர்கள் வெளிப்படையாக பொது மேடையில் பேசுவது தான் தவறு. அடுத்த தேர்தலில் இவர் ஒரு எம் எல் எ வாக இருப்பார் என நம்புவோமாக. 

இன்றைய அரசியல்வாதிகள் இவர்களை இது போன்ற நடிகர்களை தவிர்ப்பது  நல்லது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன?  ரஜினி அரசியலில் இழுக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன் என்று கருணாநிதி சொல்லுவதும், அதற்கு ரஜினி அரசியலில் என் வழி தனி வழி (மக்கள் நாசமாய் போற வழி தான்) என்று சொல்லுவதும், அடுத்த தேர்தலில் விஜயகாந்துடன் சேர கருணாநிதி துடிப்பதும், பாவம் அவருடைய ரசிகர்கள் தான்.  சென்ற தேர்தலில் விஜயகாந்தை நம்பி தங்கள் ஊரில் இருக்கும் தி மு க வினரை பகைத்து கொண்ட விஜயகாந்தின் ரசிகர்கள்  எப்படி திமுக தொண்டர்களோடு ஒன்று சேர்வார்கள்.  

அதை விடுங்கள் சென்ற தேர்தலில் இவர்களின் கேப்மாரிதனத்தை பற்றியும், மொள்ளமாரி தனத்தை பற்றியும் வாய் கிழிய பேசி ஓட்டு வாங்கியவர்கள் தேமுதிக வினர்.   இப்பொழுது எந்த முகத்தை வைத்து, இவர்கள் நல்லவர்கள் என்று எதன் அடிப்படையில் வைத்து மக்களிடம் சென்று வாக்கு  கேட்பார்கள் ?  ஒரு வேலை ஸ்பெக்ட்ரம் ஊழல் துபாய்க்கு அங்கிட்டு இருக்கு என்று சொன்னாலும் சொலுவார்கள். 

இந்த விசயத்தில், நடிகர் அஜித்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அவர் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தவர். இதனால் அவரின் ரசிகர்களின் பணம், உழைப்பு , நேரம் எல்லாம் மிச்சம் ஆகிறது, ஆனால் , பொது விஷயங்களுக்கு அவர் குரல் கொடுப்பது இல்லை என்ற அவர் மீது  குற்றச்சாட்டு இருக்கிறது அதை அவர் தவிர்ப்பது நல்லது. 

இன்றைய அரசியலின் எதார்த்த நிலையை ரசிகர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.உதரணத்திற்கு தே மு தி க வை (இதற்கும் இவர்கள் தான் வருகிறார்கள்) எடுத்து கொள்ளுவோம். இன்று அவர்களின் நிலை என்ன? இரண்டு  முறை மாநில தேர்தலையும் , ஒரு முறை பாராளுமன்ற தேர்தலையும் சந்தித்த இவர்களின் சாமானிய வேட்பாளர்களின் நிலை  அந்தோ பரிதாபம் ! நடிகர்கள் அரசியலிலே நஷ்டம் அடைந்தால் நடிக்கப் போய் விடுவார்கள், ஆனால் ரசிகர்களின் நிலையோ... 

மேடையில் நடித்து கொண்டு இருக்கும் நடிகர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும், நீங்கள் மறந்து கொண்டு இருக்கும் ஒன்றை மட்டும் உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன். தேமுதிக விற்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்கு அளிப்பதில்லை.  அவர்களின் வாக்கு அந்த கட்சிக்கு விழுவது  இல்லை.  அவர்களுக்கு விழுந்த ஓட்டுகள் 10% சதவிதம் தான். அதையும் மீறி விழும் ஓட்டுகள் இன்றைய அரசியலின் எதிர்ப்பு ஓட்டுகள் தான் இருக்கும். 

நானும் படங்களை பார்ப்பவன் தான், ஆனால் படம் முடியும் வரை தான் ரசிப்பேன். அதோடு யாராக இருந்தாலும் மறந்து விடுவேன். நான் நமது வாடிக்கையாளர்களை எந்த அளவில் மதிக்கிறோம்?  அந்த வாடிக்கையாளர்கள் தான் நமக்கு சம்பளம் கொடுகிறார்கள் , இது தான் எதார்த்த உண்மையும் கூட. வேறு எந்த தொழிலிலும் தனக்கு சம்பளம் கொடுக்கும் எஜமானர்களை அடிமையாக்கி அவர்களை கசக்கி வாழ்கை முழுவதும் அவர்களின் இரத்தத்தை உறிந்து கொண்டு இருப்பது இல்லை . இப்படியான நடிகர்கள் பொது வாழ்கையில் தூய்மையாக இருப்பார்கள் என்று எந்த அடிப்படையில் ஏற்று கொள்ள முடியும். 

நடிப்பில் வல்லவரயினும் , நிஜத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும். 

இது திரை துறையில் உள்ள அத்தனை பேருக்கும் எதிரான கட்டுரை அல்ல, இது நம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் எதார்த்த உண்மை நிலையை வைத்து எழுதப் பட்ட கட்டுரை .....

- சீனிவாஸ் திவாரி 

[vuukle-powerbar-top]

Recent Post