Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


கடந்த  23 ஆம் தேதி முதல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தங்கள் விடுதலையை வலியுறுத்தி செல்வராஜ், சசிகுமார், தவதீபன், காண்டீபன், சௌந்தர்ராஜன், ஜான்சன், நந்தகுமார் ஆகியோர் உண்ணா நிலைப் போராட்டத்தை  தொடங்கியுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் இந்த போராட்டத்தில் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது மேலும் மூன்று ஈழத் தமிழர்கள் காந்தி மோகன், ரமேஷ், ரைசுதீன் ஆகியவர்கள் பட்டினிப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தற்போது மொத்தம் பத்து நபர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஏற்கனவே உண்ணா நிலையில் இருந்து வந்த நபர்களில் சசிகுமார் , ஜான்சன் ஆகிய இருவருக்கு உடல் நிலை மோசமாகி வருகிறது . ஜான்சன் ஏற்கனவே ஒரு இதய நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்று மருத்துவர்கள் முகாமிற்கு வந்து போராடுவர்களுக்கு உடல் நிலை சோதனை நடத்தி உள்ளனர் . அவர்களின் அறிவுரைப்படி நாளை சில நபர்களை மருத்துவமையில் அனுமதிக்க உள்ளனர் . மேலும் ஈழத் தமிழர்கள் தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்று செய்யும் இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஈழத் தமிழர்களின் இந்த போராட்டத்திற்கு அரசு உடனடியாக பதில் அளிக்கவேண்டும் எனவும் தமிழக கட்சிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  







[vuukle-powerbar-top]

Recent Post