Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடர்ந்தும் மாணவர்களை கைது செய்ய திட்டமிடு இரகசிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ள கோத்தா


தொடர்ந்தும் பல பல்கலைகழக மாணவர்களை கைது செய்ய கோத்தா திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது கொத்தாவின் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு புலனாய்வாளர்களுக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன அதாவது
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் தற்போது குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற பிந்திய தகவல் வெளியாகியுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் பல மாணவர்கள் கைது செய்யப்படவுள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் சிங்கள இணையம் ஒன்று இவ்வாறு இன்று (02) செய்தி வெளியிட்டுள்ளது
யாழ் பல்கலைக்கழகத்தில் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மேலும் பல மாணவர்களின் விபரங்களை இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை பெற்றுக் கொண்டுள்ளது. குறித்த இரு தினங்களிலும் அங்கு பிரசன்னமாகியிருந்த இலங்கை அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்களைப் புகைப்படம் எடுத்து அவர்களை இனங்கண்டுள்ளனர்.
இதனை அடிப்படையாக வைத்து மேலும் பல மாணவர்கள் கைது செய்யப்படவுள்ளனர். இதன் ஒரு முன்னேற்பாடாகவே தற்போது யாழ். பல்கலைக்கழத்தைச் சூழவும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த சிங்கள இணையம் தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post