Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால் பாண்டி பஜார் கடையிலிருந்து ஈழம் வாங்கி தருவேன் என்றார் இன்றைய முதல்வர். ஈழத்தில் விடுதலைப்புலிகள் இல்லை என்றார்கள். தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இல்லை என்றார்கள். புலிகளின் சர்வதேச வலையமைப்பை சிதைத்து விட்டோம் என்று கதை விட்டார்கள். இவ்வளவு கதைகளுக்கும் அப்பாலும் இரு தினங்களுக்கு முன்பு சென்னை, பல்லாவரம், பம்மலில் விடுதலைப்புலிகள் என்று கூறி அப்பாவி இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. இதை முன்னின்று நடத்தியது யார் என்றால், காவல்துறையில் கொடுங்கோலன் என்று அழைக்கப்படும் கியூ ப்ராஞ்ச் கண்காணிப்பாளர் சம்பத் குமார். நமக்கு சந்தேகமா இருக்கிறது. தமிழக கியூ பிராஞ்ச் காவல்துறை தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா ? கண்காணிப்பாளர் சம்பத்குமார் அப்பாவி இளைஞர்களை கைது செய்யும் அளவிற்கு மனநோயாளியா ? 

சுரேஷ்குமார், மகேஸ்வரன், உதயதாஸ், கிருஷ்ணமூர்த்தி என்கிற அந்த நான்கு இளைஞர்களும் ஈழத்தில் தொடர்பு கொண்டு பேசினார்களாம். வெடிகுண்டு தயாரிப்பதற்கான குறிப்புகள் வைத்திருந்தார்களாம். வெட்கமா இல்லையா சம்பத்குமாருக்கு ? சிங்கள காவல்துறைக்கும், தமிழக காவல்துறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நிருபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post