Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அந்நிய முதலீடு விவகாரம் மக்களவையில் இன்று வாக்கெடுப்பு

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் விவகாரம் தொடர்பான விவாதத்தின் மீது மக்களவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்களது நிலைப்பாடை உறுதியாக அறிவிக்காத நிலையில், இந்த வாக்கெடுப்பில் வெற்றிப் பெறுவோம் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பரஸ்பர குற்றச்சாட்டு : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவையில் நேற்று விவாதம் தொடங்கியது. அப்போது, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினர். இதனிடையே, இந்த விவகாரததில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் மத்திய அரசை ஆதரிக்கக் கூடாது என பாரதிய ஜனதா வலியுறுத்திள்ளது இந்த பிரச்சனையில், மத்திய அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பிஜூ ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் வாக்கெடுப்பு நடப்பதை தவிர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளதாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அதேநேரத்தில், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு போதுமான ஆதரவு இருப்பதாகவும், இன்றைய வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகளின் திட்டம் பலிக்காது என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது.

பிரதமர் விளக்கம் : மக்களவையில் இன்றைய விவாதத்தின்போது, எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்கவுள்ளார். இதனிடையே, திமுக் உள்ளிட்ட கட்சிகள் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கின்ற போதிலும், மத்திய அரசுக்கு எதிரான எந்த முடிவையும் எடுக்கமாட்டோம் என அறிவித்துள்ளன. எனவே, இன்றைய வாக்கெடுப்பின்போது, மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றே அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post