Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வவுனியா நீதிபதியின் பணப்பையை திருடிய இலங்கை இராணுவப் புலனாய்வு அதிகாரிகள்

வவுனியா நீதிபதி அலெக்ஸ் ராஜாவின் பணப்பையை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோட்டே தொடரூந்து நிலையத்துக்கு அருகே இவர்கள் இலங்கை 
காவல்துறையினரால் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டனர். 

நீதிபதிகள் கூட்டத்துக்காக வவுனியா நீதிபதி அலெக்ஸ் ராஜா நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தொடரூந்து மூலம் கொழும்பு வந்தார். 

தொடரூந்தில் இருந்து இறங்கி, வெள்ளவத்தை செல்வதற்காக பேருந்து ஒன்றில் ஏறியபோதே, அவரது பயணப் பையில் இருந்த பணப்பை திருடப்பட்டது தெரியவந்தது. 

உடனடியாக அவர் காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து காவல்துறை அவசர குழு அந்த இடத்துக்கு விரைந்து சந்தேகத்துக்கு இடமான இருவரைப் பிடித்து விசாரித்தது. 

இதன்பின்னர், இந்தத் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களில் இருவர் இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளாவார். 

அவர்களிடம் இருந்து நீதிபதியின் பணப்பை மீட்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post