Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சர்வேதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உலகத் தமிழ் அமைப்பு மனித உரிமைப் பேரணி ஒன்றை நடத்தியது.

ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் சர்வேதேச மனித உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் காலை 8 மணியளவில் உலகத் தமிழ் அமைப்பு மனித உரிமைப் பேரணி ஒன்றை நடத்தியது.சரியாக காலை 8 மணியளவில் அண்ணா சமாதி அருகே துவங்கிய இந்தப் பேரணி காந்தி சிலை வரை தொடர்ந்தது. 

உலகத் தமிழ் அமைப்பு நடத்திய இந்தப் பேரணியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக வந்திருந்த பேராசிரியர் சரஸ்வதி அவர்கள் மனித உரிமைகள் பற்றிய சிறப்புரை ஆற்றி கொடியசைத்து இந்தப் பேரணியை துவங்கிவைத்தார்.
மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் முக்கியமாக சில நாட்களுக்கு முன் இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கியதைக் கண்டித்தும் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

மேலும் இந்தப் பேரணியில் பல்வேறு நாடுகளில் நடைபேறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.முக்கியமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை,சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள்,பல்வேறு நடுகளில் நடைபெற்ற இன அழிப்புகள் மற்றும் இலங்கையில் ஐ.நா செய்த தவறுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் சாமானிய மக்களின் ஊடகமான சமூக வலைதளங்களில் மறுக்கப்படும் கருத்துரிமை பேச்சுரிமைகளைக் கண்டித்தும் பல பதாதைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.மேலும் உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக மக்களுக்கு மனித உரிமை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

மனித உரிமைகளான கருத்துரிமை பேச்சுரிமை மறுக்கப்பட்டு வரும் இந்த சமயத்தில் ஒரு முக்கியமான பேரணியை முக்கியமான தருணத்தில் சிறப்பாக நடத்திய உலகத் தமிழ் அமைப்பை சார்ந்த செழியனுக்கு வாழ்த்துக்கள்.மேலும் இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கினைத்து நடத்திய உலகத் தமிழ் அமைப்பின் மற்ற உறுப்பினர்களின் பணிகள் தொடர வாழ்த்துக்கள்.








[vuukle-powerbar-top]

Recent Post