Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஷங்கரும்,சிம்புவும் இணையும் "கண்ணா லட்டு திங்க ஆசையா"பட இசைவிழா.


சந்தானம் தயாரிக்கும் "கண்ணா லட்டு திங்க ஆசையா"படத்தின் இசை வெளியிடும் நிகழ்வு டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் இயக்குனர் ஷங்கர் மற்றும் சிம்பு ஆகியோர் கலந்துகொண்டு முதல் பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

தற்போது இயக்குனர் ஷங்கரின் "ஐ" படத்தில் சந்தானம் நடித்துக்கொண்டுள்ளார்.அத்தோடு முதன்முதலில் சந்தானத்தை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் சிம்பு இதன் காரணத்தினாலேயே சங்கரையும், சிம்புவையும் தன் படத்தின் இசை வெளியீட்டை நடத்தி வைக்க அழைத்துள்ளார் சந்தானம்.

தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் "பவர்ச்டார்" ஸ்ரீநிவாசன் மற்றும் புதுமுக நாயகன் சேது ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.விஷாகா சிங் இப்படத்தில் நாயகி வேடம் ஏற்றுள்ளார்.மணிகண்டன் இயக்கியிருக்கும் முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியிருக்கும் இப்படமானது டிசம்பர் 21 ஆம் தேதி பாலாவின் "பரதேசி"படம் வெளியாகும் தேதியிலேயே வெளியாகவுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post