Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் பண்பாட்டு நடுவம் வழங்கிய செய்திக் குறிப்பு வருமாறு :

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது . முகத்தில் அமிலம் வீசப்பட்ட வினோதினி , பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட புனிதா போன்ற கொடுமைகள் தமிழ்நாட்டில் நடந்த வண்ணம் உள்ளது . ஆனால் இதை குறித்து தமிழர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை . டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வு பற்றி பேசும் தமிழக இளையோர்கள் தமிழகத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு குரல் கொடுப்பதில்லை . அதனால் இன்று சென்னை மெரினா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவமும் நாம் தமிழர் மகளிர் பாசறையும் இணைந்து தமிழ்நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பரப்புரை செய்தனர்.

இந்த பரப்புரையில் அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டனர். ஆயிரக் கணக்கான மக்களுக்கு இந்த விடயம் குறித்து துண்டறிக்கை கொடுக்கப்பட்டது . பெண்கள் மீதான வன்முறையை தடுப்போம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் பதாதை ஏந்தி பரப்புரை செய்தனர். கடற்கரையில் குடும்பம் குடும்பமாக வந்த மக்களிடம் இது குறித்த செய்தியை எடுத்துச் சென்றதோடு அவர்கள் ஆதரவை பெரும் வகையில் புகைப் படமும் எடுக்கப்பட்டது . பல்லாயிரம் மக்கள் இந்த பரப்புரையை பார்த்து சென்றனர் . பலரும் ஏன் இந்த பரப்புரை நடக்கிறது என்று தெரிந்து கொண்டு ஆர்வமுடம் இப் பரப்புரைக்கு ஆதரவு தந்தனர் . அதே சமயம் டெல்லி பெண்ணுக்காக வட இந்தியர்கள் கடற்கரையில் நடிகைகளை வைத்து பேரணி சென்றனர் . இந்தியில் கோஷங்கள் எழுப்பினர் . நாம் அவர்களுக்கு துண்டறிக்கை கொடுக்கவே , அதை அவர்களால் படிக்க முடியவில்லை .

மேலும் நாம் தமிழர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்கிறோம் என்று தெரிந்ததும் அவர்கள் முகம் சுருங்கியது, மாறியது . ஆனால் கடற்கரையில் கூடிய தமிழர்கள் இந்த தமிழ்நாட்டுப் பெண்களை பற்றி நாம் பரப்புரை செய்ததை அக்கறையுடன் கேட்டறிந்தனர் . இது குறித்து தமிழர்கள் ஏன் பேச மறுக்கின்றனர் என்று ஆதங்கம் கொண்டனர் . டெல்லியில் இருக்கும் பெண்களுக்கு பேரணி நடத்தும் தமிழர்களும் வட இந்தியர்களும் தமிழ் பெண்கள் புனிதா மற்றும் விநோதினியை பற்றி பேசவில்லை அறிந்திருக்கவில்லை என்பது வேதனை . எனினும் இன்று கடற்கரையில் தமிழக பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் என்ற பரப்புரை பெரும் வெற்றி பெற்றது .



































































































[vuukle-powerbar-top]

Recent Post