Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டிசம்பர் மாதம் யுவன் மாதம்.


எப்போதும் ஒரு வருடத்தின் இறுதியில் இசைக்கு பஞ்சம் இருக்காது.மார்கழி மாதம் தொடங்கியதும் தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை சபாக்களும் கூட்டத்தால் நிறைந்திருக்கும் அப்படிபட்ட டிசம்பர் மாதத்தில் இம்முறை ஏராளமான தமிழ் படங்களின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.

அதிலும் குறிப்பாக யுவன் காட்டில்தான் மழை.அவர் இசையமைத்த இரண்டு படங்களின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.வசந்த் இயக்கத்தில் உருவான "மூன்று பேரு மூன்று காதல்" படத்தின் இசையானது நேற்று முன்தினம் நடைபெற்றது.அதேபோல் விஷாலின் நடிப்பில் உருவாகி வரும் "சமர்" படத்திற்கான இசை டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பயண வழிகாட்டியாக இருக்கும் விஷால் பாங்கொக்கில் நடைபெறும் ஒரு எதிர்பாராத விபத்தில் எப்படி சிக்குகிறார் என்பதே "சமர்" படத்தின் கதையாகும். இப்படத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா.

[vuukle-powerbar-top]

Recent Post