Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செங்கல்பட்டில் இருக்கும் ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்து அனைவரையும் திறந்த வெளி முகாமிற்கு மாற்றுமாறு கடந்த பல காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர் . இதற்காக அவ்வப்போது உண்ணாநிலை போராட்டமும் நடத்தி உள்ளனர். ஐந்து  மாதங்களுக்கு முன் முகாம்வாசிகள் ஒரு பலமான போராட்டம் ஒன்றை மேற்கொண்ட போது  காவல்துறை முகாம்வாசிகளை படிப்படியாக விடுதலை செய்வோம் என்ற வாக்குறுதியை கொடுத்தது. அதன் அடிப்படையில் 16 ஈழத் தமிழர்களை விடுவித்தது. ஆனால் விடுதலை செய்த கையோடு மேலும் பல ஈழத் தமிழர்களை திறந்த வெளி முகாமில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டுவந்து அடைத்துள்ளது. அதனால் சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக எவரையும் அரசு விடுதலையும்  செய்யவில்லை. பொதுவாக 45 நாட்களுக்கு ஒரு முறை நான்கு அல்லது ஐந்து முகாம்வாசிகளை விடுதலை செய்து வந்த காவல் துறை இம்முறை 90  நாட்களாகியும் யாரையும் விடுதலை செய்யாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் முகாம் தமிழர்கள். இப்போது அவர்களுக்கு தேவை விடுதலை. அதனால் தங்களை வழமை போலவே 45 நாட்களுக்கு ஒரு முறை விடுதலை செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்து முதல் கட்டமாக ஏழு ஈழத் தமிழர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


நேற்று 23 ஆம் தேதி முதல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தங்கள் விடுதலையை வலியுறுத்தி செல்வராஜ், சசிகுமார், தவதீபன், காண்டீபன், சௌந்தர்ராஜன், ஜான்சன், நந்தகுமார் ஆகியோர் உண்ணா நிலைப் போராட்டத்தை  தொடங்கியுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ள இருப்பதாக தெரிகிற . தங்களது போராட்டம் வெற்றி பெற தாய் தமிழக உறவுகள் தமக்காக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னேக்க வேண்டும் என்றும் தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்சிகளும் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர் முகாம் வாசிகள். தமிழக அரசு முகாம் வாசிகளின் இந்த நேர்மையான போராட்டத்திற்கு செவி சாய்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்




[vuukle-powerbar-top]

Recent Post