Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


புதுச்சேரியில் பள்ளி மாணவி பலாத்காரம் சம்பவத்தில் துரிதமாக செயல்படாத புதுவை அரசை கண்டித்தும், பெண்கள், தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமையை கண்டித்து சுதேசி மில் அருகே 04.01.13 விடுதலை சிறுத்தைகள் கட்சி அனைத்து கட்சிகளும் , சனநாயக அமைப்புகளும் கலந்துக் கொண்ட தொடர் முழுக்க ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதுவை மாநில அமைப்பு செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அமுதவன் வரவேற்புரை ஆற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கண்டன உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில திமுக அமைப்பாளர் எம்ஏஎஸ் சுப்ரமணியன், ஏம்பலம் செல்வம், கோர்காடு கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் விசுவநாதன், பார்வர்டு பிளாக் முத்து, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையற்செல்வன், புதுவை திக தலைவர் சிவ.வீரமணி, பெண்ணுரிமை கூட்டமைப்பு கவிஞர் மாலதி மைத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் பெண்கள், மாணவிகள் பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பெண்ணுரிமை குறித்து விழிப்புணர்வை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உளவியல் பயிற்சி கொடுக்க வேண்டும்.பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமைக்கு எதிராக பேசி வருபவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25 லட்சத்தை அரசு வழங்க வேண்டும்,இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 300க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 1000 பேருக்கு மேல் கலந்துக் கொண்டனர்.

படத்தில் : கவிஞர் மாலதி மைத்ரி .


[vuukle-powerbar-top]

Recent Post