Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் பண்பாட்டு நடுவம் செய்திக் குறிப்பு :

இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிகட்டுக்கு எதிராக பரப்புரை செய்வதாக பெட்டா என்ற அமைப்பினர் அறிவித்து இருந்தனர் . அதை முறியடிக்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவத்தின் தோழர்களும் , சேனாதிபதி காங்கேயம் ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர்களும்  மற்றும் தமிழ் ஆர்வலர்களும் , இன உணர்வாளர்களும் மெரீனா கடற்கரையில் ஒன்று கூடி எதிர் பரப்புரையில் ஈடுபட்டனர். இப்படியான எதிர்ப் பரப்புரை செய்வதை அறிந்த பெட்டா அமைப்பினர் அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர் . அவர்கள் சொன்ன நேரத்திற்கு அவர்கள் அங்கு வரவில்லை. வேறு எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை. அல்லது நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து விட்டார்களா என்றும் தெரியவில்லை . எவ்வாறாயினும் தமிழர்களின்  எதிர்ப்பை உணர்ந்து பெட்டா அமைப்பினர் அந்த இடத்தில் செய்ய வேண்டிய நிகழ்ச்சியை ரத்து செய்தது தமிழர்களுக்கு வெற்றியே . இந்நிகழ்வில் கலந்து கொண்ட அத்துணை தோழர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுகள் , வாழ்த்துக்கள். இனி ஜல்லிகட்டை தடை செய்ய வேண்டும் என எவர் பரப்புரை செய்தாலும் நாம் எதிர் பரப்புரை செய்வோம் !





















[vuukle-powerbar-top]

Recent Post