Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கே.வேட்டரப்பட்டி மற்றும் கருப்பிலிப்பட்டி கிராம ரேசன் கடையில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

அப்போது வினியோகம் செய்யப்பட்ட அரிசியில் யூரியா கலந்திருப்பதாக பொதுமக்கள் கூறினர். இதனை அடுத்து கலெக்டர் லில்லி உத்தரவுப் டி மாவட்ட வழங்கல் அலுவலர் முகமது அலி மற்றும் அரூர் ஆர்.டி.ஓ. காமராஜர் ஆகியோர் குறிப்பிட்ட அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது அரிசியில் யூரியா கலந்து இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த கடையில் இருந்த அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் வேறு அரிசி கொண்டு வந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

அரிசி வழங்கும் போது முறையாக கண்காணித்து அரிசி வழங்காத கே.வேட்டரப்பட்டி கடை விற்பனையாளர், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர், எழுத்தர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக தர ஆய்வாளர் என 4 பேரை கலெக்டர் லில்லி இடைநிறுத்தம் செய்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post