Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.போன்ற  அமைப்புகள் ஹிந்து பயங்கரவாதத்தைப் பரப்புகின்றன என்று கூறிய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. மேலும் வரும் 24ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

"ஷிண்டேவின் கருத்துகளுக்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். காவி மற்றும் ஹிந்து மரபுகள் மீதான தொடர்ச்சியான அவமதிப்பை இனியும் சகித்துக் கொள்ள முடியாது. மதத்தையும், பயங்கரவாதத்தையும் பாஜக ஒருபோதும் இணைத்துப் பார்த்ததில்லை. பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை. ஷிண்டேவின் கருத்துக்கு எதிராக, வரும் 24ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். ஷிண்டே பலவீனமான உள்துறை அமைச்சர். மேம்போக்காகப் பேசுவது அவர் வழக்கம். என்ன பேசுகிறோம் என்பதைப் பற்றித் தெரியாமலேயே அவர் பேசுகிறார். அடிப்படையற்ற, கெடுமதியான அவரின் கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று பா.ஜ., வின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post