Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முகத்தில் அமிலம் வீசி தாக்கப்பட்டு இரு கண்களையும் இழந்த பொறியியல் பட்டதாரி பெண் வினோதினி பற்றி நாம்  அனைவரும் அறிவோம் . வினோதினி சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளார் . கொடூரன் ஒருவனால்  அமிலம் வீசப்பட்ட வினோதினி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததால் அவரது குடும்பத்தால் வினோதினிக்கு மருத்துவ செலவை ஏற்க முடியவில்லை. அதனால் இணையம் மூலமாக வினோதினியின் குடும்பத்தார்கள் தமிழக உறவுகளிடம் நிதி உதவி வேண்டி கோரிக்கை வைத்தனர் . புதுவை முதல்வர் வினோதினிக்கு இரண்டு லட்சம் ரூபாய்  நிதி உதவி செய்துள்ளார் . இருந்தாலும் வினோதினியின் முகத்தை சீரமைக்க 10 லட்சம் ரூபாய்  வரை  தேவைபடுகிறது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர் . இவ்வளவு பணத்திற்கு வினோதினியின் குடும்பம் எங்கு போவார்கள்?  

இந்நிலையில்  வினோதினியின்  அவல நிலையை நேரில் சென்று பார்த்த தமிழ் உணர்வாளர்களும் , கேட்டறிந்த தமிழக உறவுகளும் வினோதினிக்கு நிதி  உதவி செய்ய இணையம் ஒன்றை  தொடங்கினர் . அமெரிக்க வாழ் தமிழர்கள் இந்த முயற்சியை  முன்னெடுத்தாலும் உலகெங்கும்  வாழும் தமிழர்கள் இந்த இணையத்தில்  தங்களால்  முடிந்த நிதியை இந்த இணையத்தின் பணப் பரிமாற்ற நுழைவாயில் மூலமாக நேரடியாக வினோதினியின் தந்தையின் வங்கிக் கணக்கில்  செலுத்தினர். அவ்வாறு செலுத்திய பணம் கடந்த 10 நாட்களில் ரூபாய் 1.50 லட்சம்  சேர்ந்தது . அந்தத் தொகை வினோதினி தந்தையின் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்தும் விட்டது . படத்தில் நீங்கள்  பார்ப்பது வங்கியில் ஒரு லட்சம் பெறப் பட்டது என்பதற்குகான சான்றாகும் . மேலும் நிதி திரட்டுவதற்கு உலகெங்கிலும்   வாழும் தமிழர்கள் துடிப்புடன் செயல்பட்டு கொண்டு வருகின்றனர் . விநோதினியை தங்கள் சொந்த தங்கையையை  போலவே தமிழ் உணர்வாளர்கள் பாவிக்கின்றனர்  என்பது இதன் மூலம் தெரிகிறது . 

வினோதினி குடும்பமும் இவ்வாறு தமிழ் உறவுகள் நிதி அளித்து வருவதை நன்றியுடன்  பாராட்டுகின்றனர். தமிழர்கள் இவ்வாறு இன உணர்வு கொண்டு வினோதினிக்கு  உதவ முன்வந்துள்ளது தமிழர்களின் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும் .  இவ்வளவு அரிய  செயலை முன்னெடுத்து  நிதிக்காக இணைய தளத்தை உருவாகிய  தமிழர் தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்று சொன்னது  அவரது பெரும்தன்மையை  காட்டுகிறது . 

வினோதினிக்கு உதவி செய்ய கீழ்க்கண்ட இணையத்தை சொடுக்கவும் 
http://www.helpvinodhini.com/
வினோதினியைத் தொடர்பு கொண்டு உதவிகளைத் தெரிவிக்க விரும்புவோருக்கான தொலைபேசி எண் ரமேஷ், வினோதினியின் தாய்மாமன் - 0-9944161416.


[vuukle-powerbar-top]

Recent Post