Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பள்ளி மாணவன் மருத்துவமனையில் பலி . நாம் தமிழர் கட்சி சாலை மறியல் ஆர்ப்பாட்டம்! 

நாம் தமிழர் கட்சி வடசென்னை இளைஞர் பாசறை செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது : 

அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய போக்கினால் வெறும் காய்ச்சலுக்காக அனுமதிக்கபட்ட தனியார் பள்ளியில் +1 படிக்கும் விக்னேசு என்ற மாணவன் சிறுநீர் கழிக்க கழிவறை சென்ற பொழுது மின்விளக்கு எரியாததால் கழிவறையில் தடுப்பு சுவர் இல்லாதது தெரியாததால் தவறி நான்காவது மாடியில் கீழே விழுந்து மரணம் அடைந்தான்.

அவன் இறந்த பின்பு அவனது உடலில் இருந்து கண்,கல்லிரல்,இதயம் மற்றும் சில உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அந்த மாணவனுக்கு தக்க நிதி கிடைக்க வேண்டும் என்று நாம் தமிழர் வடசென்னை மேற்கு மாவட்டம் மற்றும் இளைஞர் பாசறை சார்பாக கொளத்தூர் பகுதி அகரம் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துனோம். 

அதில் 200 மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர் நங்கள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம் ஆனால் மாவட்ட துணை ஆட்சியர் வந்தார். 

அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நாங்கள் அவர்களுக்கு நான்கு கோரிக்கையை முன் வைத்துதோம்
1.. உயிர் இழந்த மாணவன் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிதி வழங்க வேண்டும்
2. குடும்பத்தில் ஒரே மகன் என்பதால், மாணவன் குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
3.. அலட்சியமாக செயல் பட்ட அரசு ஊழியர்கள் உடனடியாக பணிநிக்கம் செய்ய வேண்டும்.
4. மறுசீர் அமைக்கும் வரை அரசு மருத்துவமனையை திறக்க கூடாது.  

இந்த நான்கு கோரிக்கையும் பரிசிலித்து நடவடிக்கை எடுபடுதாக உத்திரவாதம் அளித்துள்ளனர். அதை நடவடிக்கை எடுக்காத பட்சத்ததில் நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டத்தை முன் எடுக்கும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப் பட்டிருந்தது 




[vuukle-powerbar-top]

Recent Post