Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பை சேர்ந்த இராஜ்குமார் பழனிசாமி கூறியிருப்பதாவது, 

உலகிற்கே நாகரீகத்தை கற்றுக் கொடுத்த தமிழனை எப்படியெல்லாம் இழிவு செய்கிறார்கள் வடஇந்தியர்கள்! தமிழர்கள் என்றால் பரட்டை தலை, பெரிய மீசை வைத்த அரக்கர்கள், காட்டு மிராண்டிகள் என்ற சிந்தனை புராணங்கள் முதல் தற்கால இந்தி திரைப்படம் வரை நீளுகிறது. அந்த வகையில் வரவிருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்திப் பட விளம்பரத்தில் கதாநாயகன் நாகரீகமான உடை அணிந்து உள்ளான் ஆனால் தமிழர்கள் அனைவரும் சட்டை அணியாமல் கைகளில் அருவாளை ஏந்தி உள்ளது போல காட்டி உள்ளனர். இது தமிழர்களை அவமதிக்கும் படியான காட்சியாகும்.

தமிழர்களை கேலி செய்வது இந்திக் காரர்களுக்கு புதிது இல்லை என்றாலும் , நாம் இதை இப்படியே தொடர விடக் கூடாது, உண்மையில் இந்த படத்தில் இத்தகைய காட்சிகள் இருக்குமே என்றால் தமிழர்கள் நாம் நமது எதிர்ப்பை தெரிவித்து தமிழர்களை இழிவு செய்வது போல் உள்ள காட்சியை நீக்கும்படி செய்ய வேண்டும். இஸ்லாமியர்களை இழிவு செய்தால் , சீக்கியர்களை இழிவு செய்தால் எப்படி அவர்கள் இனம் எதிர்ப்புக் குரல் கொடுக்கிறதோ அப்படியே தமிழர்களை இழிவாக சித்தரித்து வடஇந்தியர்கள் படம் எடுத்தால் தமிழர்களும் அவர்களது எதிர்ப்பை பதிவு செய்தாக வேண்டும். 

தமிழ் திரைப்பட துறையினர் இவ்விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும். தென்னிந்திய திரைப்பட சங்கம் இது குறித்து ஆராய வேண்டுகிறோம். தமிழ் தேசிய இயக்கங்கள் கட்சிகள் இப்படியான படத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகிறோம். இந்தப் படத்தில் தமிழர்களை இழிவு செய்யும் விதமாக எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகே தமிழகத்தில் திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதன் மூலம் நாம் வைக்கிறோம். 

இராஜ்குமார் பழனிசாமி 
தமிழர் பண்பாட்டு நடுவம் 
சென்னை. தமிழ் நாடு
[vuukle-powerbar-top]

Recent Post