Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவல் துறை செயலுக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்

சென்ற மாதம் கிறிஸ்துமஸ் நாள் அன்று அழிவில் இருக்கும் காட்டு விலங்குகளை வேட்டையாடியதாக ஸ்டான்லி ஜோன்ஸ மற்றும் ஜான் ஜேகப் என்பவர்களை காவல் துறை சுற்றி வளைத்தது. இதில் ஜான் ஜேகப் என்பவர் கிள்ளியூர் காங்கிரஸ் கட்சி சற்றமன்ற உறுப்பினரின் சகோதரர்  ஆவர். இவர்களிடம் இருந்து காவல்துறை மூன்று சட்ட விரோதமான ஆயுதங்களை கைப்பற்றியது. இந்த ஆயுதங்கள் ஸ்டான்லீக்கு சொந்தமானதாகும் .  தமிழக காவல் துறை கடந்த செப்டெம்பர் மாதம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை இடிந்தகரையில் மேற்கொண்ட பொது  போது ஒரு காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி காணமல் போனது என்று காவல்துறை சொன்னது  இந்த இடத்தில நினைவு கூறத் தக்கது .

திருக்குறுங்குடி சிறப்பு துணை ஆய்வாளர் திரு ராமச்சந்திரன் இந்த வனவிலங்குகள் வேட்டையாடிய வழக்கை விசாரணை செய்து வந்தார். ஆனால் அவருக்கு மேல உயர் பதவியில் இருக்கும்  திருநெல்வேலி மாவட்டம் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் திரு விஜய வேந்திர பிடாரி, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஸ்டான்லி என்பவருக்கு அனைத்து பாதுகாப்பும் கொடுத்து வருவதோடு இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடத்த முடியாதவாறு முட்டுக் கட்டையாக இருந்து வருகிறார்.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு அரசின் துணையோடு பாதுகாப்பு நல்கி வருகிறார்கள். ஆனால் சாதாரண மக்கள் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அணு உலையை எதிர்த்து போராடினால் அவர்கள் மேல் குண்டர் சட்டம் போட்டும் , நாட்டுக்கு எதிராக போர் தொடுத்ததாக வழக்கும் தொடுத்து மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் எனவும், வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கை நேர்மையாக விசாரிக்க ஆணையிட வேண்டும் எனவும் , குற்றவாளிகளுக்கு காவல்துறை கொடுக்கும் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.

இந்நிலையில் மக்களை இந்தப் பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பவே அணு உலை போராளிகள் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்துள்ளது வள்ளியூர் காவல்துறை.  அதாவது அணு உலைப் போராளிகள் கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பொய்யாக ஒரு மொட்டை கடிதத்தை சுட்டிக் காட்டி வழக்கு பதிவு செய்துள்ளனர் .

இவ்வாறன மொட்டை கடிதம் போன்ற கீழ்த்தரமான , கோழைத் தனமான செயலில் அணுசக்திக்கு எதிரான இடிந்தகரை போராளிகள் ஒருநாளும் ஈடு பட மாட்டார்கள் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். 510 நாட்களுக்கு மேலாக எந்த வன்முறையும் இன்றி நாங்கள் போராடி வருகிறோம் என்பதை நினைவு படுத்துகிறோம் .

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது
[vuukle-powerbar-top]

Recent Post