Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிட்டதற்கு வரவேற்பு

வைகோ அறிக்கை வருமாறு 

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரசினையைத் தீர்க்க, நடுவர் மன்றம் 1990 ஜூன் 02 இல் அமைக்கப்பட்டது. நடுவர்மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, 1991 ஜூன் 25 ஆம் தேதியும், இறுதித் தீர்ப்பு 2007, பிப்ரவரி 5 ஆம் தேதியும் வழங்கப்பட்டது. க அரசின் இடையறாத மேல் முறையீட்டின் காரணமாக, உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான முறையில் மத்திய அரசை வற்புறுத்தியபிறகே, தற்போது இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கின்றது. இதனை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. 
மத்திய அரசு இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட உடனேயே, காவிரி கண்காணிப்புக்குழு மற்றும் காவிரி நதிநீர் ஆணையத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்துவிட்டன.

அதன்பின் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் சுட்டிக்காட்டியவாறு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை உடனடியாக உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு முழுமையாக செயல்வடிவம் பெறும் என்பதை வலியுறுத்துகிறேன்.

[vuukle-powerbar-top]

Recent Post