Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


தேவநேயப் பாவாணர்(பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப் பட்டார். 

 தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென உலகிற்குப் பறைசாற்றியவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று வாதிட்டவர். மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.


மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்" எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 16 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார். பாவாணருக்கு நான்கு புதல்வர்கள்: நச்சினார்க்கினிய நம்பி, சிலுவை வென்ற செல்வராயன், அடியார்க்கு நல்லான் அருங்கலை வல்லான், மணிமன்ற வாணன். ஒரே மகள் மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி.

இறுதி நாட்கள்
பாவாணர் கட்டுரைத் தொகுப்பு நூல்களும் கட்டுரைகளும்

 • திரட்டு நூல்கள் - 12

[தொகு]1. இலக்கணக் கட்டுரைகள்

 1. தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை
 2. இலக்கணவுரை வழுக்கள்
 3. உரிச்சொல் விளக்கம்
 4. ஙம் முதல்
 5. தழுவு தொடரும் தழாத் தொடரும்
 6. நிகழ்கால வினை
 7. படர்கை 'இ' விகுதி
 8. காரம்,காரன்,காரி
 9. .குற்றியலுகரம் உயிரீறே (1)
 10. .குற்றியலுகரம் உயிரீறே (2)
 11. .ஒலியழுத்தம்
 12. .தமிழெழுத்துத் தோற்றம்
 13. .நெடுங்கணக்கு (அரிவரி)
 14. .தமிழ் எழுத்து மாற்றம்
 15. .தமிழ் நெடுங்கணக்கு
 16. .'ஐ,ஔ' 'அய்,அவ்' தானா?
 17. .எகர ஒகர இயற்கை
 18. .உயிர்மெய் வரிவடிவுகளின் ஒரியலின்மை

[தொகு]2. தமிழியற் கட்டுரைகள்

 1. செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு
 2. தென்மொழி
 3. தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்
 4. தமிழ் தனித்தியங்குமா?
 5. தமிழும் திரவிடமும் சமமா?
 6. திராவிடம் என்பதே தீது
 7. மொழி பெயர்முறை
 8. நிகழ்கால வினைவடிவம்
 9. நிகழ்கால வினை எச்சம் எது?
 10. கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள்?
 11. ஆய்தம்
 12. மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள்
 13. பாயிரப் பெயர்கள்
 14. திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்
 15. சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்
 16. ஆவுந் தமிழரும்
 17. கற்புடை மனைவியின் கண்ணியம்
 18. அசுரர் யார்?
 19. கோசர் யார்?
 20. முருகு முதன்மை
 21. மாந்தன் செருக்கடக்கம்
 22. தற்றுடுத்தல்
 23. தலைமைக் குடிமகன்
 24. மாராயம்
 25. முக்குற்றம்
 26. திருவள்ளுவர் காலம்
 27. வள்ளுவர் கோட்டக் கால்கோள்விழா வாழ்த்துரை விளக்கம்

[தொகு]3. மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

 1. மொழியாராய்ச்சி
 2. உலக மொழிகளின் தொடர்பு
 3. முதற்றாய் மொழியின் இயல்புகள்
 4. வாய்ச் செய்கை யொலிச் சொற்கள்
 5. சொற்குலமும் குடும்பமும்
 6. சொற்பொருளாராய்ச்சி
 7. சொல்வேர்காண் வழிகள்
 8. ககர சகரப் பரிமாற்றம்
 9. மொழியாராய்ச்சியும் மொழியகழ்வராய்ச்சியும் ஒன்றே
 10. மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள்
 11. சேயும் சேய்மையும்
 12. ஆலமரப் பெயர் மூலம்
 13. கருப்பும் கறுப்பும்
 14. தெளிதேனும் களிமதுவும்
 15. கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்

[தொகு]4. மொழிநூற் கட்டுரைகள்

 1. ஒப்பியல் இலக்கணம்
 2. சொற்பொருள் வரிசை
 3. வண்ணனை மொழிநூல்
 4. பொருட்பாகுபாடு
 5. உலக வழக்கு கொச்சை வழக்கன்று
 6. எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும்
 7. வடசொல் தென்சொல் காணும் வழிகள்
 8. பாவை என்னுஞ் சொல் வரலாறு
 9. திரு என்னும் சொல் தென்சொல்லா, வடசொல்லா?
 10. 'உத்தரம்', 'தக்கணம்' எம்மொழிச் சொற்கள்?
 11. 'மதி' விளக்கம்
 12. 'உவமை' தென்சொல்லே
 13. திரவிடம் தென்சொல்லின் திரிபே
 14. தமிழ் முகம்
 15. வள்ளுவன் என்னும் பெயர்
 16. கழகமெல்லாம் சூதாடுமிடமா?
 17. இந்திப் பயிற்சி

[தொகு]5.பண்பாட்டுக் கட்டுரைகள்

 1. புறநானூறும் மொழியும்
 2. வனப்புச் சொல்வளம்
 3. அவியுணவும் செவியுணவும்
 4. 501 ஆம் குறள் விளக்கம்
 5. அரசுறுப்பு
 6. பாவினம்
 7. அகத்தியர் ஆரியரா? தமிழரா?
 8. தமிழ்மன்னர் பெயர்
 9. வேளாளர் பெயர்கள்
 10. பாணர்
 11. குலப்பட்ட வரலாறு
 12. கல்வி (Culture)
 13. நாகரிகம்
 14. வெடிமருந்து
 15. பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை

[தொகு]6. தென்சொற் கட்டுரைகள்

 1. வடமொழிச் சென்ற தென்சொற்கள்
 2. வடமொழித் தென்சொற்கள்
 3. வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்
 4. 'இலக்கியம்', 'இலக்கணம்'
 5. 'இலக்கணம்', 'இலக்கியம்' எம்மொழிச் சொற்கள்?
 6. திருவென்னும் சொல் தென்சொல்லே
 7. 'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது?
 8. 'மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?
 9. என் பெயர் என்சொல்?
 10. சிலை என்னுஞ் சொல் வரலாறு
 11. .கருமம் தமிழ்ச் சொல்லே!
 12. எது தேவமொழி?
 13. சமற்கிருதவாக்கம்சொற்கள்
 14. சமற்கிருதவாக்கம்-எழுத்து
 15. சமற்கிருதவாக்கம் - இலக்கணம்
 16. ஆரியப் பூதம் அடக்கம் எழும்புதல்

[தொகு]7.செந்தமிழ் சிறப்பு

 1. மதிப்படைச் சொற்கள்
 2. தமிழின் தனிப்பெருந்தன்மைகள்
 3. தமிழின் தனியியல்புகள்
 4. தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள்
 5. தமிழின் தொன்மையும் முன்மையும்
 6. தமிழும் திராவிடமும் தென்மொழியும்
 7. தமிழ் வேறு திரவிடம் வேறு
 8. செந்தமிழும் கொடுந்தமிழும்
 9. திசைச்சொல் எவை?
 10. மலையாளமும் தமிழும்
 11. இசைத்தமிழ்
 12. 'கடிசொல் இல்லை காலத்துப்படினே'
 13. புதுமணிப் பவளப் புன்மையும் புரைமையும்
 14. போலித் தமிழ்ப்பற்று
 15. மதுரைத் தமிழ்க் கழகம்
 16. உலகத் தமிழ்க் கருத்தரங்க மாநாடு
 17. தமிழனின் பிறந்தகம்
 18. தமிழன் உரிமை வேட்கை
 19. உரிமைப் பேறு
இவ்வாறு பல அரிய நூல்களை இயற்றி பாவாணர் தமிழ் மொழியை மீட்டு தமிழே உலகின் தொன்மை மொழி என்பதை உலகிற்கு அறுதியிட்டு கூறினார் . தமிழ் மொழியை மீட்ட பாவாணரின் பிறந்த நாளை தமிழர்கள் கொண்டாடுவோம். தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்  


[vuukle-powerbar-top]

Recent Post