Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரான்சில் வெளியிடப்பட்ட ராஜீவ் கொலை தூக்குக் கயிற்றில் நிஜம் நூல் 

திருச்சி வேலுச்சாமி அவர்கள் எழுதிய ராஜீவ் காந்தி படுகொலை தூக்குக் கயிற்றில் நிஐம் என்னும் புத்தகம் பிரான்சில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டது. 10.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து நூல் அறிமுகத்தினை பிரித்தானியாவில் இருந்து வந்திருந்த திரு. பரமேஸ்வரன் அவர்கள் ஆற்றியிருந்தார். தாயக விடுதலைச்செயற்பாட்டாளர்கள் வெளியிட்டு வைக்க பிரான்சின் தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள், தமிழ் இன விடுதலை உணர்வாளர்கள் பெற்றுக்கொண்டதோடு தம்முடைய ஆழ்மன உணர்வுகளையும் தெரிவித்திருந்தனர். துன்பியல் சம்பந்தமாகவும், இன்றுவரை விடைதெரியாதும், ஊகத்தின் அடிப்படையில் இன்று பலர் பல ஆண்டுகளாக விளக்கமற்ற சிறைவாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருப்பதுவும் உண்மைகள் யாவும் உறங்கிப்போய் படுகொலைக்கு உடந்தையாக இருந்த சதிகாரர்கள் சுதந்திரமாக நடமாடித் திரிவதும் உண்மையும், சத்தியமும், நோர்மையும் என்றும் மறையாது காலம் சென்றாலும் வெளியே வரும் என்பதற்கமைய பல உண்மைகளைச் சொல்லும் புத்தகமாக நிஐம் உள்ளது.







[vuukle-powerbar-top]

Recent Post