Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com






அமிலம் வீசி தாக்கப்பட்டு இறந்த அன்புத் தங்கை வினோதினிக்கு இன்று சென்னையில் சிறப்பான முறையில் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது . அவரது உடல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது . நாம் தமிழர் கட்சி , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மக்கள் கட்சி சிபிஎம் கட்சி தொண்டர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . சேவ் தமிழ்ஸ் இயக்கம் , மெய் 17 இயக்கம் , அகில இந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வினோதினிக்கு சிறப்பான இறுதி வணக்கத்தை செலுத்தினர் . திருமாவளவன், பண்ருட்டி வேல்முருகன், ஜவஹருல்லா போன்ற தலைவர்களும் , திரைப்பட துறையை சேர்ந்த கவிஞர் தாமரை, இயக்குனர்கள் புகழேந்தி , கௌதமன், அமீர் போன்றவர்களுக்கும் இந்த இறுதி நிகழ்வில் பங்கு பெற்றனர் . மனித உரிமை ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்களும், தமிழ் அமைப்புகளும் காலத்து கொண்டனர் . மாணவர் அமைப்பினர் வினோதினியின் படத்தை கைகளில் ஏந்தி சாலையில் வீரவணக்க முழக்கமிட்டனர் . பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்தனர் . பொது மக்கள் ஏராளமான பேர்கள் வினோதினிக்கு இறுதி மரியாதை செலுத்தினர் . அனைவரும் வினோதினிக்கு பிரியா விடை அளித்தனர் . வினோதினியின் உடல் அவரது சொந்த ஊரான திருக் கடையூருக்கு எடுத்து செல்லப்பட்டது. நாளை காலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து வினோதினியின் உடல் செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் ஒத்து மக்கள் வாகனத்தை வழி மறித்து வினோதினிக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர் . புதுவையில் மாணவர்கள் பல்லாயிரம் பேர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர் . 

















































































[vuukle-powerbar-top]

Recent Post