Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை வேகமாக தூக்கில் போட்டுக் கொன்று, காங்கிரஸ் கட்சி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். 


இது குறித்து நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மரண தண்டனையை இரகசியமாக நிறைவேற்றிய மத்திய காங்கிரஸ் அரசு, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை வேகமாக தூக்கி போட்டுக் கொன்று, அதன் மூலம் நாட்டையும், சட்டத்தையும் காப்பதில் தாங்கள் உறுதியாக செயல்படுகின்றோம் என்று காட்டி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். 



மேலும், இந்த முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் வீரப்பனின் கூட்டாளிகளாக இருந்து, காவல் துறையினருக்கு எதிராக வீரப்பன் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறி தடா சிறப்பு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு இந்திய உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கபட்ட மீசை மாதையன், சைமன், ஞானபிரகாசம், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேரின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ததும், அதனை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு அவர்களை தூக்கில் போட்டு கொல்ல அனுமதி அளித்துள்ளதும் ஆகும். 



இப்போது இந்த நால்வரின் மரண தண்டனையை கர்நாடக சிறையில் வைத்து வேகமாக நிறைவேற்றும் முயற்சியில் மத்திய காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், 
நியாயமற்ற ஒரு தீர்ப்பின் அடிப்படையில் 4 தமிழர்களின் வாழ்வை முடிக்கும் ஒரு தீர்ப்பை மனிதாபிமானம் உள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 


இன்றைக்கு இந்த நான்கு அப்பாவித் தமிழர்களையும் தூக்கிலிட்டுக் கொல்ல முற்பட்டுள்ள காங்கிரஸ் அரசு, ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளவர்களை தூக்கில் போடுவதற்கு ஒரு முன்னோட்டமாகவே இந்த தண்டனை நிறைவேற்றத்தை செய்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள சீமான், இந்த நான்கு தமிழர்களையும் நாம் காப்பாற்ற ஒன்று திரண்டு போராடாவிட்டால், நாளை நம் தம்பிகள் முருகன், சாந்தன், பேரளிவாளன் ஆகியோரையும் காப்பாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும், இந்த நான்கு பேரின் தண்டனை நிறைவேற்றத்தை தடுத்து நிறுத்த போராடுவோம் என்றும் நாம் தமிழர் சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post