Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


வீரப்பனாருடன் தொடர்பு உள்ளது என்ற பொய் குற்றச் சாட்டின் அடிப்படையில் கர்நாடக சிறையில் உள்ள நான்கு தமிழர்களையும் தூக்கிலிட இந்திய அரசு துடிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம் . இந்நிலையில் இந்த நான்கு அப்பாவித் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழர் எழுச்சி இயக்கமும் உலகத் தமிழர் பாதுகாப்பு அமைப்பும் சேர்ந்து போராட்டம் நடத்தினர் . இப்போராட்டத்தில் தமிழ் மாநில சிபிஐ கட்சி பொறுப்பாளர் திரு மகேந்திரன் , தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, ஊடகவியலாளர் டி எஸ் மணி, திரைப்பட இயக்குனர் கௌதமன் , தமிழர் முன்னேற்ற கழக தலைவர் அதியமான் ஆகியோர் கலந்து கொண்டு நான்கு தமிழர்களை காப்பாற்ற வேண்டும் , தூக்கு தண்டனையை அரசு இரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இப்போராட்டத்தில் பெண்கள் நிறைய பேர் பங்கு கொண்டு தூக்கு தண்டனையை தடுக்க தடுப்புச் சுவர் போல அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தினர். தூக்கு தண்டனைக்கு எதிராக முழக்கமிட்டனர். தமிழக அரசு விரைந்து நான்கு தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்


























[vuukle-powerbar-top]

Recent Post