Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கதிர் வீச்சின் கொடூரம்.  அணுசக்தி துறையில் வேலை பார்த்த உயர் அதிகாரியின் வாக்குமூலம் ! 

இவர் பெயர் ராஜ்குமார் குப்தா. மராத்திய மாநிலத்தில் உள்ள டிரோம்பே என்னும் ஊரில் உள்ள புளுடோனியம் அணு உலையில் 1964 ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார் . 16 ஆண்டுகள் அங்கு வேலை பார்த்த பிறகு குப்தாவிற்கு  அணு கதிர் வீச்சு தாக்குதலினால் அவரது தோலில் நோய் தொற்றிக் கொண்டதை அறிந்தார். அதன் பிறகு அவருக்கு ஏற்பட்டது தொடர் சோதனை. 

ஓராண்டு காலம் வேலைக்கு செல்லாமல் மருத்துவம் மட்டுமே பார்த்து வந்தார் . ஓராண்டுக்கு பின் வேலைக்கு சேர்ந்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் வந்த பின் வேறு வழி இல்லாமல் மீண்டும் வேலைக்கு சேர்ந்தார் . தோலுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே வேலையையும் செய்து வந்தார். பணியில் இருந்த பொது  பல வகையான நோய்க்கு ஆளானார்.  முடிவில் அவருக்கு தனது எலும்புகள் வலுவை இழப்பது தெரியவந்தது. எலும்புகள் தன்னுடைய இயல் தன்மையை இழந்து இளகி விட்டதை உணர்ந்தார். அதன் காரணமாக அவருடை இடுப்புக்கு கீழுள்ள எலும்பு முறிந்தது . இதனால் படுத்த படுக்கைக்கு ஆளானார். 1997 முதல் முழுவதும் உடல் ஊனமுற்ற நிலைக்கு தள்ளப்பட்டார் . இறுதியில் 1999 ல் தன்னுடைய வேலையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்பும் அணு சக்தி நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வந்தார். ஆனால் இந்த மருத்துவமனையில் அவருக்கு போதுமான சிக்கிச்சை அளிக்கப் படுவதில்லை என்று கூறுகிறார். இந்த மருத்துவ மனையில் தன்னை போல் பலரும் அணுக் கதிர் வீச்சுக்கு ஆளாகி உள்ளனர் என்று நமக்கு தெரிவித்தார். அணு சக்தி துறை இவரை போன்றவர்களை வேலைக்கு அமர்த்தி சக்கையாக பிழிந்து இப்போது குப்பை தொட்டியில் உதவாத பண்டத்தை  போடுவது போல போட்டுள்ளது என்கிறார். மேலும் இது குறித்து நாம்  மேலும் செய்திகளை கேட்டறிந்த போது பல அதிர்ச்சியான செய்திகளை சொன்னார் திரு குப்தா . 

அதாவது இந்தியா  போன்ற நிர்வாக கட்டமைப்பு இல்லாத நாடுகளுக்கு அணு சக்தி என்று ஒன்று தேவை இல்லை . இதனால் நாட்டிற்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது. வளர்ந்த நாடுகள் அணு உலையை புறக்கணிப்பதால் அந்த நாடுகள் இந்தியாவிற்கு அணு உலையை விற்க தயாராகி வருகின்றன . மேலை நாடுகளுக்கு இந்தியா போன்ற நாடுகள் பெரும் சந்தையாக இருக்கிறது.   இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. இதன் மூலம் அதிகாரிகள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறார்கள். அதனால் தான் அணு சக்தி மிகவும் பாதுகாப்பானது என்று மக்களுக்கு பொய் சொல்கிறார்கள் . மேலும் அணு உலையில் ஒன்று அறியாத நபர்களை கீழ் நிலை பணிகளுக்கு  அமர்த்தி அவர்கள் வாழ்கையை நாசமாக்குகிறார்கள். பல ஊழியர்கள் அவர்கள் குடும்பங்கள் இதனால் பாதிப்புக்கு ஆளாகிறது. ஊழியர்கள் அரசுக்கு பயந்து அணு உலையின் ஆபத்தை வெளியே சொல்ல மறுக்கிறார்கள் . ஆனால் எனக்கு அந்த பயம் இல்லை . நான் எங்கு வேண்டுமானாலும் இந்த உண்மையை சொல்வேன். அணு உலை மிகவும் அபாயகரமானது . சுற்றுப் புற சூழலை முற்றிலும் அழித்து விடக் கூடியது. இதை பொது மக்கள் எல்லா வகையிலும் எதிர்க்க  முயற்சி செய்ய வேண்டும் . கூடங்குளம் மக்களுக்கு எனது பாராட்டுகள். அவர்களுக்கு நான் உதவி செய்ய அணியமாக இருக்கிறேன் . அணுக்கதிர் வீச்சால் உண்மையாக பாதிக்கப்பட்ட நான் அணுக கதிர் வீச்சின் அபாயத்திற்கு சாட்சியாக இருக்கிறேன்.  இதன் கொடுமையை  யாரிடமும் எந்த இடத்திலும் வந்து சொல்ல கடமைப் பட்டுள்ளேன். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு அணு உலையின் பாதிப்பு குறித்து கேட்டறியலாம் . இந்தியாவை பாதுகாப்பான நாடாக நாம் மாற்ற வேண்டும் என்றால் உடனே நான் அணு உலைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் . இல்லையென்றால் இந்தியா என்ற நாடே இல்லாமல் போக வாய்ப்பு  உள்ளது என்று சொல்லி முடித்தார் திரு குப்தா . 

இதன் பிறகாவது அணு உலை ஆதரவாளர்கள் திருந்துவார்களா ? 

[vuukle-powerbar-top]

Recent Post