Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கொடுங்கோலன் ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து இன்று இடிந்தகரையில் அணு உலை போராளிகள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளனர் . தமிழ்நாட்டில் வேறு எங்கும் செய்ய முடியாதபடி காவல்துறை நெருக்கடி இருக்கும் . ஆனால் இடிந்தகரையில் காவல்துறை அடுக்குமுறை இல்லை . அதனால் ஊர் மக்கள் ஒன்று கூடி ராஜபக்சேவின் உருவ பொம்மையை துடைப்பத்தால் அடித்தும், செருப்பால் அடித்தும் பின்னர் ஊர்வலமாக சென்று கடற்கரை ஓரத்தில் அமைக்கப் பட்டுள்ள தூக்கு மேடையில் ராஜ பச்கேவின் உருவபொம்மையை தொங்கவிட்டனர். அதோடு நின்று விடாமல் உருவ பொம்மையை எரித்தும் , சிங்கள கோடியை எரித்தும் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் . இப்படியானதொரு எதிர்ப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் நடைபெற்ற தில்லை என்பது குறிப்பிடத் தக்கது . 
























[vuukle-powerbar-top]

Recent Post