Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நீதியற்ற முறையில் அப்சல் குரு தூக்கிலிடப் பட்டதற்கு  எதிராகவும் மரண தண்டனையை ஒழிய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து கட்சிகள் . இயக்கங்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் போராட்ட்டம் நடத்தினர் . இப்போராட்டத்தில் மதிமுக மலை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சி மணியரசன் , தோழர் தியாகு , சட்டமன்ற உறுப்பினர் ஜவஹருல்லா , பழ நெடுமாறன் அய்யா , தமுமுக அப்துல் சமது , திராவிட விடுதலை கழகம் தலைவர்கள் , பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் பல இயக்கத் தலைவர்கள் , தொடர்கள் , சமூக ஆர்வலர்கள் , மனித உரிமை செயற் பாட்டாளர்கள் கலந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர் . மாண்டொழிக மரண தண்டனை என்று கோஷம் எழுப்பினர் . யாருக்கும் தெரியாமல் இந்திய அரசு அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியது மனித குலத்திற்கு விரோதமானது என்று முழங்கினர். இனி வரும் காலங்களில் இந்திய அரசு இத்தகைய பயங்கர வாதப் போக்கை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் . மனிதனை எந்த வகையில் கொலை செய்தாலும் அது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைத்தனர் . 











[vuukle-powerbar-top]

Recent Post