Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


முத்துக்குமாரின் காதலிகள்

எல்லோரும் தம்
முலைகளை மீட்டிக்கொண்டிருந்தனர்
வேனில் இன்னும் தொடங்கவில்லை
ஆனால் உன் மேலேறிய தீ
எம் தோல் வழண்டு போக்கும் பசலையாகிறது
உறங்காத கண்களுடையோர்
மட்டுமே உன் காதலியராயினர்
பாலையின் தலைவன் நீ
தலைவியின் தலையினை நன்னீரால் நனைத்து
தன் தலையினை செந்தீயில் தோய்த்தவன்
போரைக் கள்ளெனக்  குடித்துச் சிவந்த கண்கள்
உடையவனின் உயிர்
எம்முலைகள் மேலேறியது அணங்காய்
பிரிவிடை ஆற்றார் ஆயினோம் யாம்

[vuukle-powerbar-top]

Recent Post