Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை.

மத்திய அரசின் தொடர் ததமிழின விரோதப் போக்கினை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் வேலுரில் இன்று நடத்தப்பட்ட வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்றனர் . இதனால் வேலூர் நகரமே முடங்கியது. இந்திய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஐ நா வில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை கூட நீர்த்து போகச் செய்து விட்டது இந்தியா. இந்தியாவின் நிலைப்பாட்டால் ஈழத் தமிழர்களின் துயரம் இன்னும் தொடர் கதையாகி வருகிறது . இந்தியாவை கண்டிக்கும் வகையில் மாணவர்கள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சியும் இப்போது களமிறங்கி உள்ளது . இந்திய அரசின் கீழ் செயல் படும் வருமான வரி அலுவலகத்தை முற்றுகை செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் இக்கட்சியினர். தமிழர்கள் இந்தியாவிற்கு இனி ஏன் வரயு செலுத்த வேண்டும் என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது .











[vuukle-powerbar-top]

Recent Post