Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


காலங்கடந்த முடிவு எடுத்திருக்கிறார் கருணாநிதி. மிக தேவையான பொழுது நாடகமாடிவிட்டு தேவையே இல்லாத பொழுது எந்த நன்மையையும் விளையாது என்கிற பொழுது விலகி இருக்கிறார் ஆனால் இந்நிலைப்பாட்டை விமர்சிக்கப்போவதில்லை ஏனினில் காங்கிரஸ் என்ற கட்சியும் அதன் தலைமையும்இல்லாது ஒழிக்கப்பட வேண்டும் என்ற தமிழ்ப்பிள்ளைகளின் கொள்கைக்கு திமுக விலகல் ஒரு நற்செயலே. ஆனால் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை படித்ததும் சில விடயங்கள் நியாபகத்திற்கு வந்தது, கருணாநிதி என்ற ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டில் இல்லாதிருந்தால் ஈழ மக்களுக்கு இந்த நிலை வந்திருக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் பதவியில் இருக்கும் பொழுதும், மத்திய அரசில் கூட்டணியில் இருந்த பொழுதும் கடந்த முப்பது வருடமாக மாறி மாறி குழப்பி குழப்பி தன் வாயாலே கூறிய சில விசயங்களை இங்கே பகிர்கிறேன். இது அவர் ஆடிய நாடகத்தின் மிக சில வரிகள். மொத்தமாக எழுதினால் அது நாள் கணக்கில் படிக்கவேண்டிவரும் என்பதால் சில முக்கியமானவற்றை பகிர்கிறேன்.

ஈழப்போராட்டம்/விடுதலைபுலிகள்/போராளிகள் பற்றி கருணாநிதி இன்று (மார்ச் 19,2013) :-

“தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சனையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.”


ஈழப்போராட்டம்/விடுதலைபுலிகள்/போராளிகள் பற்றி கருணாநிதி முன்பு கூறியது:-

மார்ச் 25,2011 அன்று :-

“இலங்கையில், ஈழத்தமிழர்களிடத்திலே ஏற்பட்ட அந்த கொந்தளிப்பு, அவர்கள் நடத்திய போராட்டம், நாம் கண்ணீர் விடுகின்ற அளவிற்கு முடிந்தது ஏன்? என்ன காரணம்? அந்த போராட்டம் தமிழ் ஈழத்தை தராமல் தாழ்ந்து போனது ஏன்? என்ன காரணம்? சகோதரயுத்தம். இதைத்தான் நான் பல ஆண்டுகாலம் சொல்லி வந்தேன். யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தமிழன் வீழ்ந்தது போல தெரியலாம். ஆனால் தமிழ்ச் சமுதாயம் எத்தனையோ முறை வீழ்ந்து வீழ்ந்து எழுந்த சமுதாயம். அதையாரும் அடியோடு வீழ்த்தி விட முடியாது. அதையாரும் அறவே அழித்து விட முடியாது. அந்த கனலில் அந்த தணலில் இன்னும் பல சமுதாயங்கள், எழுச்சிகள் ஏற்பட்டே தீரும். அந்த நம்பிக்கையுடன் தி.மு.க.வானாலும், அணி சேர்ந்திருக்கிற கூட்டணி கட்சி நண்பர்கள், தலைவர்களானாலும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் முடியும்.”

நவம்பர் 24,2009 அன்று:-

“ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன- அதே நேரத்தில் இளந்தலைவர் ராஜீவ்காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்தினமும், பத்மநாபாவும், யோதீஸ்வரனும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கிய போது - அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?”

ஜூலை 25, 2009 அன்று :-

“எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல்அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்”

மே 12, 2009 அன்று :-

“இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புப் பற்றி பிர தமரும் ராகுல்காந்தியும் குறிப்பிட்டுள்ளனர் ஒன் றைச் சொல்ல விரும்பு கிறேன். நம்முடைய தியாக விளக்கு, திருமதி சோனியா காந்தி அம் மையார் அவர்களோ, பிர தமரோ இலங்கையைப் பற்றிப் பேச வில்லை என்று சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியிலே நம் முடைய இளஞ்சிங்கம் ராகுல் காந்தியின் பேச்சை நான் தொலைக் காட்சி யிலே கேட்டேன். வரிக்கு வரி இலங்கைத் தமிழர் களுக்காக - அமெரிக்கா விலே வாழும் தமிழர் களுக்காக - இங்கிலாந் திலே வாழும் தமிழர் களுக்காக இங்குள்ள காங்கிரஸ் கட்சி பாடு படும், இந்தியா கவலைப் படும், ஏற்ற நடவடிக்கை களை எடுக்கும் என்று சொன்னார். அது நேற் றைக்கு முன்தினம்.

நேற்றைக்கு இந்தியப் பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் வந்தார், செய்தியாளர்களைச் சந் தித்தார். மிகப் பெரிய செய்தியாளர்கள் கூட் டம். அதிலே சொன் னார் - வரிக்கு வரி - இலங்கையிலே போர் நின்று, அரசியல் தீர்வு காண வேண்டும். ஜன நாயக வழியிலே இலங் கைப் பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும். அங்கே வாழ்கிற இலங்கைத் தமி ழர்களுக்கு அமைதி யான வாழ்வு கிடைத்தாக வேண்டும். சொல்வார் கள் - அதெல்லாம் சரி, சோனியா காந்தி சொன் னார்களா என்று கேட் பார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தீர்மானம்”


ஏப்ரல் 28,2009 அன்று :-

“இலங்கையில் போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் தாக்குதல் நடைபெறுவதாக கூறப்படுவது, மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற என்பதை போன்றது,
எனது உண்ணாவிரதத்தால் இலங்கையில் ஏற்பட்ட விளைவுகள் திருப்தி அளிக்கிறது. எனினும், இலங்கை அதிபர் ராஜபக்சே தான் அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும்.இலங்கை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற நான் முயற்சி எடுப்பேன். இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என்று நம்புகிறேன்.”

ஏப்ரல் 20 2009 அன்று :-

“நிருபர் : பிரபாகிரனை தீவிரவாதியாக பார்கறீர்களா ? .
கலைஞர் : அவர் என் நல்ல நண்பர். நான் ஒன்றும் தீவிரவாதி இல்லை . விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் இல்லை .விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒரு சிலர் அவ்வாறு இருக்கலாம் .அதற்கு அவர் காரணம் ஆகா முடியாது.விடுதைப்புலிகளின் குறிக்கோள் சரியானதே. அனால் அதை அவர்கள் அடைவதற்கான வழிமுறைகள் தவறானது. யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டால் நான் வருத்தப்படுவேன்.

மறுநாள்:-

கலைஞர் : என் கருத்துக்கள் திரித்து கூறப்பட்டுள்ளது .நான் அவ்வாறு கூறவில்லை . பிரபாகரன் விடுதலைப்போராட்ட வீரராக தொடங்கி , பிறகு தீவிரவாதியாக மாறி விட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் குறிக்கோள் சரியாக இருந்தாலும் , அதை அவர்கள் அடைய பின்பற்றிய வழிமுறை தவறானது . ராஜீவ் காந்தியின் மரணத்தை இந்த நாடு மக்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.."

ஏப்ரல் 9 2009 அன்று :-

”இலங்கையில் இப்போது நிகழும் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது இரண்டுவிதமான முடிவுகள்தான் எடுக்க முடியும். ஒன்று அங்கு போர் நிறுத்தம் செய்வது. மற்றொன்று போரின் முடிவு நமக்குத் தோல்வியாக இருந்தால் சட்டப்பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் போட்டதைப்போல பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வேண்டியது.

பல நாடுகளை தனது சாம்ராஜ்யத்தின்கீழ் கொண்டுவந்த மாவீரன் அலெக்சாண்டர், கடைசியாக போரஸ் மன்னரை வென்றபோது அவரை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான். ஒரு மன்னனாக நடத்த வேண்டும் என்று போரஸ் மன்னன் கூறினார். அதையேற்று அவரை சகல கெளரவங்களுடன் சரிநிகர் சமமாக நடத்தினார் அலெக்சாண்டர். அதைப்போல போரின் முடிவு இப்படியிருப்பின் போரஸ் மன்னரை அலெக்சாண்டர் நடத்தியதைப் போல பிரபாகரனை மரியாதையாக நடத்த வேண்டும்…”

ஜனவரி 30,2009 அன்று :-

”புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது:திமுக
இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?. இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது. புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.”

ஏப்ரல் 29, 2007 அன்று:-

“விடுதலைப் புலிகளின் செயல்-கருணாநிதி அதிர்ச்சி

சென்னை: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 12 பேரை விடுதலைப்புலிகள் கடத்திக் கொண்டு போயிருக்கும் செயல் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இப்போது காணாமல் போன 12 மீனவர்களும் இலங்கை கடற்புலிகளின் ஒரு குழுவினரால் சிறை பிடிக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் ஒரு முகாமில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது.

கடல் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 12 மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு, மத்திய அரசின் மூலமாக அனைத்து முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ளும். இதற்கு முன்பு நமக்கு கிடைத்த தகவல்படி நடைபெற்ற இந்த சம்பவம் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டதாக கருதி கொண்டு அந்த தகவலை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.”

பிப்ரவரி 23, 2007 அன்று :-

“புலிகளுக்கு ஆயுத கடத்தல்-கருணாநிதி எச்சரிக்கை

சென்னை:தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை: தமிழகத்தைக் களமாகக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதை அனுமதிக்க முடியாது. அதுபோல எந்த அமைப்பாவது அல்லதுகட்சிகள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எந்தவித பயமும்,பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். ஈழத் தமிழர்களைக் காக்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு விடுத்து வரும் கோரிக்கைகலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுதமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தலாம் என யாரும் நினைத்து விடக் கூடாது.

நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு,புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாக தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்.ஆயுதக் கடத்தல் தொடர்பாக அரசு அலட்சியமாகவோ, மெத்தனமாகவோ இருக்கவில்லை. சமீபத்தில் பெருமளவில் ஆயுதங்கள், வெடிபொருட்கள்,படகுகள் பிடிபட்டதைத் தொடர்ந்து தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பலரைக் கைது செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டபடகும் அழிக்கப்பட்டுள்ளது”

டிசம்பர் 21,2006 அன்று :-

"அதேபோல ஈழத்தமிழர்கள் இத்தகைய படுகொலைகளுக்கு ஆளாகாத வகையில் இரு சாராரும் இணைந்து ஒரு மாற்று ஏற்பாட்டைக் கண்டுபிடித்து, அதில் ஓர் உடன்பாடு ஏற்பட்டு அமைதியை உருவாக்கினால் அதற்கும் மகிழ்ச்சி அடைவேன்”

மே 16,2000 அன்று :-

"விடுதலைப் புலிகள் மூலம் தமிழீழம் அமைவதை ஆதரிக்கிறேன் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தமிழீழம் அமைந்தால் வரவேற்பேன் என்று சொல்லியிருக்கிறேன். இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது''

ஜெயின் கமிசனில் ஜனவரி 17,1997 அன்று:-

“Sh.Rajiv Gandhi primarily wanted to know how the unification of the militant groups can be achieved. When I met him once along with Mr Murasoli Maran, I had suggested that the EPRLF holds about 70 Council seats in Jaffna and they are prepared to forego every council seat, except four or five in favour of LTTE. Even Sh. Rajiv Gandhi was shocked on knowing this and suggested that either me or two Members of Parliament nominated by me can go to Sri Lanka and bring about the unification of the militant groups. Later on the LTTE turned the offer by stating that we do not want the Council seats as a matter of right but we will contest elections and win. NEPC Elections were about to be held. IPKF was gradually being withdrawn. LTTE boycotted the NEPC elections."

ஜெயின் கமிசனில் ஜனவரி 17,1997 அன்று:-

"I had supported the LTTE along with other parties, but after the murder of Padmanabha, I withdrew my support."

ஜெயின் கமிசனில் ஜனவரி 17,1997 அன்று:-

"Since the feelings of the DMK Party, Central Govt and MGR Govt was one and the same, we also supported the return of the arms. I do not remember whether the DMK Legislative Party supported the Resolution passed in the Assembly for granting Rs 4 and a half crores as aid to LTTE, by the MGR Government. I do not know whether it was a unanimous resolution or an unopposed resolution." (எல்லாமே நியாபகம் இருக்கும் கருணாநிதிக்கு புலிகளுக்கு பணம் கொடுத்த விசயம் மட்டும் மறந்துவிட்டதாம்)

காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் 1991:-

“திமுக தலைவர் கருணாநிதி 1991-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைப் பிரச்சினையில் முரணற்ற வகையில் நிலையெடுத்து வந்துள்ளதை சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகளின் தனிஈழம் என்ற கோரிக்கையில் உள்ள சிரமங்களை ஒப்புக்கொண்டு உரையாற்றினார்”

ஆகஸ்ட் 25,1983 ன்று அன்று:-

“இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால் தமிழகத்திலே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டுக்கு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி எடுக்காது”.

ஏப்ரல் 30,1973 அன்று :-

1973-ஆம் ஆண்டில் இவர் முதலமைச்சராக இருந்தபோது தில்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசிவிட்டு சென்னை திரும்பி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

"இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு உங்களின் தார்மிக ஆதரவு உண்டா?'' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ""போராட்டத்துக்கு ஆதரவில்லை'' எனத் திட்டவட்டமாகக் கூறினார்."


இதை எல்லாம் இப்பொழுது தரவேண்டிய அவசியம் என்ன? ஜெயலலிதா எடுத்த நிலைப்பாடுகள் சரியா? அதை நீங்கள் இப்படி வரிசை படுத்துவீர்களா என்று நீங்கள் கேட்கலாம். மாணவர் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் கருணாநிதியின் இந்த விலகல் எந்த ஒரு திசைதிருப்பலையும் உருவாக்கிவிட கூடாது என்பதற்காகவும். இன்று போராளியின் கால் மண்ணை எடுத்து நெற்றியில் திலகமிட்டு என்றெல்லாம் எழுதுகிறார் ஆனால் கருணாநிதி போராளிகளை எத்தனை கேவலமாக நடத்தினார் என்று அவர் வாயால் கூறிய சில வார்த்தைகளை வைத்து தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்காகவும், இந்த பதவி விலகல் தமிழருக்கு எந்த நன்மையையும் பெற்றுத்தராது என்பதையும் எடுத்துக்காட்டவே எழுதினேன். ஜெயலலிதாவின் செயல்களையும் வார்த்தைகளையும் இதை விட பெரிதாக பட்டியலிடலாம். கருணாநிதி சேலை கட்டிய ஜெயலலிதா, ஜெயலலிதா வேட்டி கட்டிய கருணாநிதி என்று அனைவரும் அறிவோம். ஆனால் ஜெயலலிதா இப்படி பசப்பு வார்த்தை போட்டு தமிழர்களை ஏமாற்ற முனைவதில்லை எதிர்த்தால் நேரடியாக எதிர்க்கிறார் அப்பொழுது அதை நேரடியாக எதிர்கொள்ளலாம். ஆனால் இப்பொழுது கருணாநிதியின் இந்த பசப்பலை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
[vuukle-powerbar-top]

Recent Post