Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

 கேரள மீனவர்கள் கொலை வழக்கு குற்றவாளிகளை திருப்பி அனுப்ப மறுக்கும் இத்தாலி அரசை கண்டித்து அந்நாட்டு தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு மீனவர்கள் இத்தாலிய கடற்படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த முறை விசாரணைக்கு வருவதற்கு முன்பே ரோமில் உள்ள இந்திய தூதரை திருப்பி அழைத்துக் கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள மக்களின் உணர்வை மத்திய அரசு எடுத்துக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், நாடு திரும்ப அனுமதிக்கப்பட்ட இத்தாலி வீரர்களை திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை இது தொடர்பாக இத்தாலி தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இத்தாலி கப்பல் பாதுகாவலர் விவகாரம் பற்றி மக்களவையில் பிரச்சனையை கிளப்ப பாரதிய ஜனதா திட்டமிட்ட உள்ள நிலையில் மத்திய அரசு இந்த முடிவுகளை எடுத்துள்ள
[vuukle-powerbar-top]

Recent Post