Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காஞ்சிபுரத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடியை காவல்துறை என்கவுன்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் மஞ்சுளா தனது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த யுவராஜா, கமல்நாத் ஆகிய இரண்டு பேர், அரிவாளால் மஞ்சுளாவை வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

அந்த இடத்திற்கு அருகிலேயே காவல்துறை சோதனைச் சாவடி இருந்ததால், காவல்துறை அவர்களை பிடிக்க முயன்றது. அப்போது அவர்கள் இருவரும் அரிவாளைக் காட்டி காவலரை மிரட்டினர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் யுவராஜா துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார். மற்றொரு இரவுடியான கமல்நாத் காயமடைந்ததால் காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

English Summary:

A rowdy was shot dead near Kanchipuram Tamilnadu. This man hacked a woman and attempted to escape. But police killed him in an encounter. He is shot dead in front of another rowdy, his friend named Kamalnath. Further investigations are going.

பெண்ணை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுக்கொலை: காஞ்சியில் பரபரப்பு 
[vuukle-powerbar-top]

Recent Post