Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முகநூலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த அடி.  ஒருவரே  88 முறை அவதூறு பேசியிருக்கிறார்: ஞான தேசிகன்

தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி முகநூலில்  ஒரு வாரத்திற்கு முன்பு தான் கணக்கை  தொடங்கியது. தொடங்கிய நாளிலே ஆயிரம் மக்கள் அதில்    இணைந்தனர். இதை பார்த்த காங்கிரஸ் கட்சி தனக்கு அமோக வரவேற்பு உள்ளது என்று நினைத்து மகிழ்ந்தது. ஆனால் உண்மையில் இந்த ஆயிரம் மக்களும் உடனே  காங்கிரஸ் பக்கத்தில் இணைந்தது காங்கிரஸ் கட்சியின் மீது இருந்த பாசத்தினால் அல்ல . அவர்கள் மீது இருந்த கோபத்தில் தான் என்று பிறகு தான் தெரிய வந்தது. முதல் நாளிலேயே பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியை வாட்டி வறுத்து  எடுத்தனர் . அவர்களிடம் கேட்காத கேள்விகளே இல்லை என்று சொல்லலாம் . பின்னூட்டங்கள் பெருகிக் கொண்ட வந்தன. ஈழத் தமிழர் பிரச்சனை , மீனவர் பிரச்சனை கூடங்குளம் பிரச்சனை என எல்லா பிரச்சனைகளிலும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு எதிராகவே செயல் பட்டு வந்துள்ளது . இப்பொது போக தமிழர்கள் சார்பில் அவர்கள் இது வரை குரல் கொடுக்க வில்லை . உங்களுக்கு எல்லாம் எதற்கு ஒரு கட்சி என்று தமிழர்கள் திட்டி தீர்த்து விட்டனர். 

இந்நிலையில் கீழே குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டுவில்லை என்பது போல இப்போது தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன் அறிக்கை வெளியிட்டுள்ளார் . அதில் , காங்கிரஸ் மீது அவதூறு சொல்பவர்கள் யார் யார் என எங்களுக்கு தெரியும் . சிலர் மட்டும் தான் விமர்சனம் செய்துள்ளனர் . ஒரே ஆள் 88 முறை அவதூறு கருத்துகளை பதிந்துள்ளார் என்று தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் ஞான தேசிகன். உண்மையில் காங்கிரஸ் மீது விமர்சனம் வைத்தவர் பலரையும் காங்கிரஸ் தனது பக்கத்தில் இருந்து தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இப்பொது காங்கிரஸ் பக்கத்தில் 5200 பேர்கள் இணைந்துள்ளனர். இவர்களும் தினம் தினம் காங்கிரஸ் கட்சியை திட்டி தீர்த்துக் கொண்டு தான் வருகின்றனர். முகநூலில்  கருணாநிதிக்கு கிடைத்த அவமானத்தை தொடர்ந்து இப்போது காங்கிரஸ் கட்சிக்கு தான் கிடைத்துள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் காங்கிரஸ் கட்சி இன்னும் தமிழக மக்கள் தங்கள் கட்சியை விரும்புகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி தப்புக் கணக்கை போட்டுள்ளது . 






[vuukle-powerbar-top]

Recent Post