Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யாழ் விருது - குறும்படப் போட்டி அறிவிப்பு 

தமிழர் நலம் பேரியக்கத்தின் கலை பண்பாட்டுப் பிரிவு 2013ம் ஆண்டுக்கான ’’யாழ் விருது 2013.தமிழ் குறும் படப்போட்டி’’ யை சென்னை அசோக்நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து இன்று அறிவித்துள்ளார்கள்.சென்ற ஆண்டு திரைப்பட எடிட்டர் பி.லெனின் தலைமையில் 2012ம் ஆண்டுக்கான போட்டிகள் நடந்தது.நூற்றுக்கனக்கான குறும்படங்கள் உலகம் முலுவதிலும் இருந்து வந்து போட்டியில் பங்கு பெற்றன.பரிசளிப்பு விழா சென்னை கோடம்பாக்கம் எம்.எம் திரையரங்கில் ஒரு நாள் நிகழ்வாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொடங்கி வைக்க,எடிட்டர் லெனின்,பாடலாசிரியர் சிநேகன்,இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்,நடிகை அஞ்சலி,ரொபோ கணேஷ்,திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்,போன்றோர் பங்கேற்க்க சிறப்பாக நடந்தது.விழாவில் திரைப்பட இயக்குநர் அருண்மொழிக்கு குறும்படங்களுக்கான சாதனையாளருக்கான ‘’பெருஞ்சித்தனர் விருது’’ வழங்கி மரியாதை செய்யப்பட்டது.அது போன்றே இந்த ஆண்டும் மிகச்சிறப்பான முறையில் விழாவை நடத்த தமிழர் நலம் கலைப்பண்பாட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வ.லெனின் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளது.அனைவ்ரும் போட்டியில் பங்கெடுத்து பரிசுகளை வென்று செல்ல அழைக்கிறோம்.  


[vuukle-powerbar-top]

Recent Post