Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம்
பயிற்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்து
சிதம்பரம் உதவி ஆட்சியரை முற்றுகை!

வரும் கல்வியாண்டு முதல் 3600 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும்அது தமிழகமெங்கும் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
கல்விஅதுவும் பள்ளிக் கல்விதாய்மொழி வழியிலேயே அமைவதுதான் மாணவர்களின் புரிதல் வளர்வதற்கும்படைப்பாற்றல் மலர்வதற்கும்தன்னம்பிக்கை வலுப்படுவதற்கும் அடிப்படையாக அமைகிறது என்பது உலகம் முழுவதும் உள்ள கல்வி அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.
இந்திய அரசு பிறப்பித்த 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டமும்சமச்சீர்க் கல்வி குறித்து ஆய்வு செய்தளித்த முத்துக்குமரன் குழு பரிந்துரையும் தாய்மொழி வழி கல்வியையே வலியுறுத்துகிறது.
இலவசக் கல்வி வழங்குவதிலும்கல்வி வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டபழங்குடியினபிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி காப்பதிலும் தமிழ்நாடு முதல் வரிசை மாநிலமாகத் திகழ்கிறது.
இந்த சமூகநீதி நோக்கத்தையே ஆங்கில வகுப்பு தொடங்கும் தமிழக அரசின் முடிவு கேள்விக் குள்ளாக்கிவிடும். ஆங்கில வழி மாணவர்களுக்கும் தமிழ்வழி மாணவர்களுக்கும் மேல் கீழ் என்ற மனப்பிளவை இது ஏற்படுத்திவிடும். 
தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு தீர்வாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மேம்படுத்தவும்தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யவும்மொழிப் பாடம் என்ற வகையில் ஆங்கிலத்தை செம்மையாகக் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாறாக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கும் தமிழக அரசின் முடிவு சிக்கலைத் தீர்ப்பதற்கு மாறாக  தமிழ் மக்களிடையே படைப்பாற்றலையும்தற்சார்பையும் தாழ்த்திஏற்றத்தாழ்வையே அதிகரிக்கும்.
எனவே அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கும் முடிவை கைவிட வேண்டும் என கோரி சிதம்பரம் நகரில், தமிழக மாணவர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் அனு மளிப்பதற்காக, சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று காலை கூடினர்.
தமிழ்வழிக் கல்வியின் அவசியத்தை விளக்கியும்ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களை முறையாக கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்தக் கோரியும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர் அங்கிருந்து கோரிக்கை மனுவை கையில் உயர்த்திப் பிடித்தபடி ஊர்வலமாக சிதம்பரம் வருவாய் தீர்வாய அலுவலகம் நோக்கி முழக்கமிட்டபடி சென்று மாணவர் பிரதிநிதிகள் மூலம் சிதம்பரம் துணை ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். வருவாய் தீர்வாய குறைக் கேட்கும் நிகழ்விலிருந்த துணை ஆட்சியர் திரு.சுப்பிரமணியன் மாணவர்கள் அளித்த மனுவை பெறாமல் மாணவர்களை கடுமையான சொற்களால் பேசி கண்டித்தார். மாணவர்கள் யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் தவறாக வழி நடத்தப்படுவதாகவும் கூறிய அவர், மாணவர்களை வெளியேற்றச் சொல்லிக் காவலர்களிடம் உத்தரவிட்டார்.
இதையடுத்து அங்கிருந்த தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவாதமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் ஆகியோர், மாணவர்களின் கோரிக்கையிலுள்ள நியாயத்தை விளக்கி துணை ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். துணை ஆட்சியர் உத்தரவிட்டும், மாணவர்கள் வெளியேறாமல் கோரிக்கை மனுவை பெறக் கோரியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மனுவை பெற்றுக் கொண்ட துணை ஆட்சியர் இது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இதில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள்சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள்சிதம்பரம் நகர மேல் நிலைப் பள்ளிஉயர் நிலைப் பள்ளி,தொடக்கப் பள்ளியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 
தொடர்புக்கு: தோழர். வேசுப்பிரமணிய சிவா, அமைப்பாளர். தமிழக மாணவர் முன்னணி, +91 9688155886[vuukle-powerbar-top]

Recent Post