Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தங்க மீன்கள்

ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தை இயக்கியவர் ராம். அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கி, நடிக்கும் படம் 'தங்க மீன்கள்'.  இப்படத்தை இயக்குனர் கெளதம்மேனன் தயாரித்துள்ளார். அப்பா- மகளுக்கிடையே நிகழும் பாச உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது என்றே கூறலாம். இப்படத்தின் இசை கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கற்றது தமிழ் படத்தில் சிறப்பான இசைத் தொகுப்பை அளித்த நா.முத்துக்குமார்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியே 'தங்க மீன்கள்' படத்திற்கும் இசைக் கூட்டணி அமைத்துள்ளது. படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்.

1. ஆனந்த யாழை மீட்டுகிறாய்: இந்த பாடலை ஸ்ரீராம் பார்த்த சாரதி பாடியுள்ளார். மிகுந்த குரல் வளத்துடன் இவர் பாடியுள்ள பாடல் நெஞ்சத்தை உருக்குவதாய் உள்ளது.

2.நதி வெள்ளம்: 'நதி வெள்ளம் போலே' என்று தொடங்கும் பாடலை ராகுல் நம்பியார் பாடியுள்ளார். ஏற்கனவே கற்றது தமிழ் படத்தில் 'பற பற பட்டாம்பூச்சி' பாடலை பாடியவர் ஆகையால், இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நா.முத்துக்குமாரின் வரிகள் பாடலுடன் ஒன்றி, மனதை வருடுவதாய் அமைந்துள்ளது.

3.யாருக்கும் தோழன்: இந்த சிறிய பாடலை அல்போன்ஸ் ஜோசப் பாடியுள்ளார். இந்த பாடல் ஏற்கனவே படத்தின் முன்னோட்டத்தில் காட்டப்பட்டது.

4.ஃபர்ஸ்ட், லாஸ்ட்: குழந்தைகள் சாதனாவும், சஞ்சனாவும் இந்த பாடலை பாடியுள்ளனர். 'ஸ்கூலில் தமிழில் பேசும் பிள்ளைகளை தலையில் கொட்டி, பைன் போடுறாங்க' எனும் வரி கவனிக்க வைக்கிறது.

ஒவ்வொரு பாடலுக்கும் முன் ராமின் குரலில் வரும் முன்னுரை அசத்தல். இதோ ஒரு முன்னுரை:

"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்; முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று..."
[vuukle-powerbar-top]

Recent Post