Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தோனேசியா நாட்டில் சிக்கி உள்ள மகனை மீட்க தமிழகம் வந்துள்ள ஈழத்து பெண்மணி.

தமிழீழம் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த குசலக் குமாரி என்ற அம்மையார். இவர் 2009 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்த போது தனது மகன் துஷ்யந்தனை (வயது 26)  இலங்கையில் இருந்து வெளியே அனுப்பினார். விமானம் மூலம் வெளியேறிய  துஷ்யந்தன் இந்தோனேசியா நாட்டில் தரை இறங்கினார். அங்கு இறங்கியவுடன் தனது தாயாருக்கு அழைத்து பேசியுள்ளார். தானும் தன்னுடன் வந்த 9 தமிழர்களும் ஆஸ்திரேலியாவிற்கு படகில் செல்லவுள்ளதாக தனது  தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.   அது தான் துஷ்யந்தன் அவரது தாயாரிடம் பேசிய கடைசி வார்த்தை. அதன் பின் குசலக் குமாரி அம்மாள் தனது மகனின் குரலை கேட்கவே இல்லை. இலங்கை அரசுக்கு இது பற்றி விசாரிக்க வேண்டும் என பலமுறை கேட்டும் இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக தனது  மகன் எங்கு இருக்கிறான் என்ற தகவல் தெரியாமல் பலரிடம் உதவி கேட்டும் சோர்ந்து போயிருந்த நிலையில்  குசலக் குமாரி அம்மாள் தற்செயலாக இலங்கையில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழில் ஒரு புகைபடத்தை பார்த்தார் . அதில் இலங்கையில் இருந்து இந்தோனேசியா வந்துள்ள  அகதிகள் படம் இருந்தது . அதில் தனது  மகன் துஷ்யந்தன் இருந்துள்ளதை பார்த்துள்ளார் குசலக் குமரி அம்மாள் .  அந்த செய்தியில், இந்தோனேசியா சிறையில் இந்த ஈழத் தமிழர்கள் வாழ்வதாகவும் , அவர்களுக்கு கரப்பான் பூச்சுகளை  உணவாக கொடுக்கப் படுகிறது என்ற  செய்தியை கேட்டு அதிர்ந்து போனார் குசலக் குமாரி அம்மாள்.                                

மனம் வெம்பிய நிலையில் மகனை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும்  என்ற எண்ணத்தில் தற்போது தமிழகம் வந்துள்ளார் குசலக் குமாரி அம்மாள்.இது  வந்து இங்குள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழர் நலன் சார்ந்த கட்சிகளிடம் உதவி பெற வந்துள்ளதாக தெரிவித்தார் . ஆனால் உண்மையில் இந்தோனேசியா வில் உள்ள இலங்கை தூதரகம் தான் இந்த முயசியை எடுக்க வேண்டும் . இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து துஷ்யந்தனை மீட்குமா என்பது கேள்விக் குறியே. அதனால் இந்தோனேசியாவில் உள்ள  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் யாரேனும் இருந்தால்  தயவு செய்து துஷ்யந்தனை சிறையில் இருந்து மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். துஷ்யந்தனை பற்றிய தகவல் தெரிந்தால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். ஒரு முறையேனும் துஷ்யந்தனை 
தன்னுடன்  பேச வைக்க வேண்டும் என்பதே குசலக் குமாரியின் உடனடி வேண்டுகோளாக  உள்ளது. இந்த விடயத்தில் உதவு முன் வருபவர்கள் அல்லது துஷ்யந்தன் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கவும் tamilsculturalcentre@gmail.com  அல்லது தொடர்பு கொள்ளவும் தமிழர் பண்பாட்டு நடுவம். 9566224027. 


      
[vuukle-powerbar-top]

Recent Post