Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


சென்னை கொடுங்கையூர் பகுதியில் 18 வயது நிரம்பாத மீனா என்ற பெண்ணை கை கால்களை கட்டி விட்டு வீட்டிலேயே உறவினர் பையனுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர் பெற்றோர்கள். மீனாவை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர் . 

இதை பற்றி அப்பகுதி மக்கள் தகவல் கொடுக்க , நாம் தமிழர் மகளிர் பாசறை தோழர் செங்கொடி மற்றும் அவர் கணவர் ரவி ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளனர். உடனே ஆய்வாளர் அப்பெண்ணையும் , உறவினர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மீனா என்ற பெண் 18 வயது நிரம்பவில்லை , கட்டாய தாலி கட்டப் பட்டார் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. 

 பின்பு காவல் துறை உதவியுடன் இத்திருமணம் செல்லாது என்று எழுதி வாங்கிய பின் , மீனாவை அவர் சித்தப்பாவிடம் ஒப்படைத்தனர் காவல்துறையினர் . 

பெற்ற தாய் தந்தையரே இவ்வாறு கட்டாய திருமண ஏற்பாடு செய்தாலும் பெண்ணின் விருப்பத்தை மீறி திருமணம் செய்ய முடியாது. படிக்கும் மாணவியின் படிப்பை பாதியிலேயே நிறுத்தினர் பெற்றோர்கள் . இப்பொது பெண்ணின் சித்தப்பா அவரை மேற்கொண்டு படிக்க வைப்பதாக ஒப்புக் கொண்டார். பிள்ளையை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்த பெற்றோர்களுக்கு நல்ல பாடம் புகட்டப் பட்டது. தக்க நேரத்தில் சென்று மாணவி மீனாவை மீட்ட நாம் தமிழர் தோழர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்த்துகளை பகிர 7871736600 என்ற எண்ணுகிற்கு அழையுங்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post