Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பூந்தமல்லி சிறப்பு முகாம் தமிழர்களை இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்த தமிழக அரசு !

பூந்தமல்லி சிறப்பு முகாமில் பல  ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவ்வப்போது இந்த முகாமில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தனர் . இவர்களுக்கு ஆதரவாக தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் சிறப்பு முகமாய் முற்றுகையிட்டு போராட்டம் செய்து வந்தன . இந்த சிறப்பு முகாம்களை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கையும் வைத்தன . இந்நிலையில் இந்த முகாம்களை மூடும் நிமித்தமாக அங்குள்ள தமிழர்களை திருச்சி சிறைக்கு மாற்றும் ஆணையை நேற்று காவல் துறை முகாம் வாசிகளுக்கு கொடுத்தது . இந்த ஆணையை ஏற்க மறுத்தனர் முகாம் வாசிகள் . காரணம் தங்களை திறந்த வெளி முகாமிற்கு தான் மாற்ற வேண்டும் எனவும் சிறைச்சாலைக்கு மாற்றக் கூடாது என்று வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே காவல்துறை இவர்களை சிறைச்சாலைக்கு சட்ட விரோதமாக மாற்ற முடிவு செய்தது . இதற்கு முகாம் தமிழர்கள் ஒத்துழைக்காத காரணத்தால் அவர்களை அடித்து , குண்டுக் கட்டுக்காக  காவல்துறை வாகனத்தில் ஏற்றி திருச்சி சிறை சாலைக்கு கொண்டு சென்றது  காவல்துறை  . முகம்வாசிகளின் வழக்கு தொடர்பான ஆவணங்களையும்  காவல்துறை எடுத்துக் கொண்டதாக  முகம் வாசிகள் தெரிவித்தனர் . காவல்துறையின் இத்தகைய செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் . நீதிமன்றம் முகாம்வாசிகளை சிறைக்கு மாற்றும்  நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்திருந்த நிலையில்  தமிழக இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது தமிழ் உணர்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் செங்கல்பட்டு பூந்தமல்லியை பல முறை முற்றுகை செய்து போராட்டம் செய்ததால் , இப்போது இந்த முகாம்கள் நிரந்தரமாக மூடப் படும் எனத் தெரிகிறது . முகாம்கள் மூடப் பட்டாலும் ஈழத் தமிழர்களின் துயரம் மட்டும் தொடர் கதையாகவே உள்ளது  .  
[vuukle-powerbar-top]

Recent Post