Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


குன்னூரில் பயற்சியளிக்கப்பட்ட இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவரும் திங்கள்கிழமை கோவையிலிருந்து விமானம் மூலமாக மும்பை சென்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ மையத்தில் இலங்கையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளான எம்.எஸ்.பண்டார தசநாயகா மற்றும் சி.எஸ்.ஹரிச்சந்திரா ஆகியோருக்கு இந்திய பாதுகாப்புத் துறை சார்பில் 10 மாத காலப் பயிற்சி கடந்த மே 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 

இந் நிலையில், அவர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழகத்தில் எழும்பிய கடும் எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் இருவரும் திங்கள்கிழமை அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். திங்கள்கிழமை பகலில் வெலிங்டனிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட இலங்கை அதிகாரிகள் மற்றும் அவர்களது மனைவியர், குழந்தைகள் மாலையில் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு, 7.45 மணிக்கு விமானம் மூலமாக மும்பை சென்றனர். பிறகு மும்பையிலிருந்து அவர்கள் கொழும்பு சென்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.



[vuukle-powerbar-top]

Recent Post