Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எக்ஸ்பிரஸ் அவென்யூ பெரு நிறுவன வணிக வளாகத்தை கண்டித்து வளாகத்தின் உள்ளேயே சென்று போராட்டம் ! 

கடந்த 1 ஆம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் மூன்றாம் மாடியில் கீழே குதித்து பிரிந்த ஒரு உயிர் பற்றி கேள்விபட்டிருப்போம். மென்பொறியாளர் சண்முகம் என்பவர் தற்கொலை முயற்சி செய்திருந்தாலும் அவரை காப்பாற்ற எந்த முயற்சியும் வணிக வளாகத்தின் நிர்வாகம் எடுக்கவில்லை. காவல்துறையும் நிர்வாகத்தை கண்டிக்காமல், இந்த நிகழ்வை தட்டிக்கேட்ட பொதுமக்களை கண்டபடி திட்டியது மிரட்டியது. 

இந்நிலையில் இன்று எக்ஸ்பிரஸ் அவின்யூ வணிக வளாகத்தின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்தும், அந்த வளாகத்தில் பாதுகாப்பு வலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் வளாகத்தின் உள்ளேயே சென்று போராட்டம் நடத்தினர். நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டனர். இப்போராட்டம் பொதுமக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. 

இருந்தும் கூட வணிக வளாகத்தின் நிர்வாகிகள் போராட்டம் செய்த சமூக ஆர்வலர்களிடம் பேச்சு நடத்த முன்வரவில்லை . மாறாக அவர்களை அப்புறப் படுத்தவே முயன்றனர். காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சில நிமிடங்களின் காவல்துறை தனது கடமையை செய்ய உடனே விரைந்தது. போராட்டம் செய்த நபர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. மேலும் போராட்டம் செய்தவர்கள் மேல் வழக்கும் பதிவு செய்தது. பின்பு பல மணிநேரம் காவல்துறையுடன் பேச்சு வார்த்தை நடந்தது. ஒருவருக்கு இருவர் பிணை கையெழுத்து போட்டால் தான் விடுதலை செய்வோம் என காவல்துறை சொல்லவே, பிணையில் போராட்டம் செய்தவர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டார்கள்.

எக்ஸ்பிரஸ் ஆவின்யூ போன்ற மனிதாபிமானமற்ற வணிக வளாகங்கள் தங்கள் தவறை இதுவரை உணரவில்லை . மன்னிப்பும் கேட்கவில்லை. இப்படியான கொடூர மனநிலையில் செயல்படும் பெரு நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்களை நாம் மனமார பாராட்டுவோம். இதில் ஜெகதீஸ்வரன் (லோக் சட்டா கட்சி) இந்த போராட்டத்தை வழி நடத்தி உள்ளார். அவரோடு சில சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சமூகத்தின் மேல் அக்கறை கொண்டு அநீதியை தட்டிக் கேட்ட இளையோர்களை நாம் பாராட்டத் தவறக் கூடாது. அனைவருக்கும் நம் வாழ்த்துகள். 









[vuukle-powerbar-top]

Recent Post