Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு உலைக்கு எதிராக இடிந்தகரை மக்களின் மரணப் போராட்டம் (படங்கள்) 


இடிந்தகரை மக்கள் தொடர்ந்து 700 நாட்கள் அணு உலைக்கு எதிராக தொய்வின்றி போராடி வருகிறார்கள். அணு உலை தொடர்பான பல விழிப்புணர்வு செய்திகளை தமிழக மக்களுக்கு கொடுத்தது அவர்கள் தான். கூடங்குளம் அணு உலையில் உள்ள சிக்கல்கள், ஊழல்கள், முறைகேடுகள் என அனைத்தையும் தங்களுடைய அறிவு பலத்தால் வெளிக் கொண்டு வந்தனர் அணு உலை எதிர்ப்பாளர்கள். போராட்டத்தை கட்டுக் கோப்பாக எந்த வித வன்முறையும் இன்றி வழி நடத்தினார் உதயகுமார் அவர்கள். கடந்த 700 நாட்களில் இடிந்தகரை மக்கள் அணு உலையை மட்டும் எதிர்த்து போராடவில்லை. ஈழப் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளனர். 

இப்படி வீரியமாக போராடி வந்த இடிந்தகரை மக்களுக்கு இந்திய அரசும் தமிழக அரசும் கொடுத்த தண்டனை கொஞ்ச நஞ்சமல்ல. பல்வேறு வழக்குகளை அவர்கள் மேல் போட்டு அவர்கள் போராட்டத்தை நசுக்கியது. அதன் உச்சகட்டமாக இடிந்தகரை மக்களின் எதிர்ப்பையும் மீறி அரசு கூடங்குளத்தில் துப்பாக்கி முனையில் மின்சார உற்பத்தியை தொடங்கியது. எனினும் போராட்டம் முடியவில்லை , இறுதி மூச்சு வரை போராடுவோம் என உதயகுமார் அறிவித்துள்ளார். 


இந்நிலையில் அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்ய அணுமின் நிலையம் தயாராகி வருவதை கண்டித்து இடிந்தகரை மக்கள் மரணப் போராட்டத்தை இன்று நடத்தினர் . பல்லாயிரக் கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு அணு உலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் பெண்களும், குழந்தைகளும், ஆடவர்களும் குடும்பம் குடும்பமாக வீதியில் வந்து பிணங்களை போல் படுத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் இப்போராட்டத்தின் மூலம் அரசுக்கு சொல்லும் செய்தி என்னவென்றால் , கூடங்குளம் அணு உலை ஏற்கனவே தரம் தாழ்ந்த உபகரணங்கள் கொண்டு இயங்கி வருகிறது, இப்படியான அணு உலையில் அணுக் கதிர்வீச்சு கசிந்து வெளியேறினால் இடிந்தகரை மக்கள் இப்படித் தான் பிணங்களாக காட்சி அளிப்பார்கள். அப்போதும் இந்த அரசு பிணங்களை அள்ளிச் செல்லக் கூட எந்த நடவடிக்கையும் எடுக்காது.  மேலும் இவர்கள் பிணங்கள் மீது தான் கூடங்குளம் அணு உலை திறக்கப் படுகிறது என்ற செய்தியையும் உலக ஊடகங்களுக்கு கூறியுள்ளனர். இப்படியான மரணப் போராட்டத்தை இடிந்தகரை மக்கள் முன்னெடுத்துள்ள நிலையில் , இனியாவது தமிழக அரசு இவர்களின் நியாயமான போராட்டத்திற்கு செவி சாய்த்து இந்த மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு அணு மின் நிலையத்தை செயல்படுத்தட்டும் என்பதே சமூக் ஆர்வலர்களின் கோரிக்கை.    













[vuukle-powerbar-top]

Recent Post