Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


ஹைதராபாத்தில் ஹைடெக்ஸ்(Hitex) என்னும் நிறுவனம் நிறுவனம் நடத்திய கண்காட்சியில் இலங்கை சுற்றாலத்துறை கலந்து கொண்டது. அவர்கள் அமைத்த கடையின்  முன்னர் நின்றுகொண்டு 'இலங்கையை புறக்கணிப்போம்' பரப்புரையை தமிழர்கள் செய்தனர். இனப்படுகொலை செய்தியை அங்கு வந்த மக்களிடத்தில் பரப்புரை செய்தனர். 

ஆந்திரா ஹைதராபாத் அருகில் உள்ள ஹைடெக் சிட்டியில் (High Tech City) நடந்த வர்த்தக கண்காட்சியில் இலங்கை சுற்றுலாவை ஊக்குவிக்க கடை அமைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த தமிழ் உணர்வாளர்கள் ஐந்து நபர்கள் சிங்கள கடையின் முன்னே ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் இலங்கையை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பி உள்ளனர். ‘என்ன செய்யலாம் இதற்காக’ என்ற புத்தகத்தை அங்கிருந்து பொதுமக்களிடம் காட்டி இலங்கை அரசு தமிழர்களின் மேல் கட்டவிழ்த்த கொடூரத்தை படங்கள் மூலம் விளக்கினர். பாலச் சந்திரனின் படத்தையும் அங்குள்ள மக்களிடம் காட்டினர். இதை பார்த்த பொதுமக்கள் சிலரும் ஊடகத் துறையினரும் தமிழக உறவுகளுடன் ஆர்பாட்டத்தில் குதித்து உள்ளனர். இலங்கை சுற்றுலா கண்காட்சி நடத்தும் நபர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தங்கள் கடையை மூடி விடுவதாகவும் ஒரு கட்டத்தில் கூறியுள்ளனர். 

அதன் பிறகு ஆர்ப்பாட்டம் செய்த தோழர்கள் வெளியே வந்த போது ஆந்திரா காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்து மாதபூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு மன்மோகன் அவர்களை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களை தற்காலிகமாக எச்சரிக்கை கைது தான் செய்துள்ளதாக தெரிவித்தார். சொந்த ஜாமீன் அடிப்படையில் அவர்கள் ஆவணங்களை சரி பார்த்த பின்னர் இன்னும்  விடுதலை செய்வதாக உறுதி அளித்தார். தமிழக அரசின் ஆதரவு இந்த விடயத்தில் இருக்கிறது அதனால் தயவு செய்து அவர்களை விடுவித்து விடும்படி கேட்கவே,  ஆம் இலங்கை விடயம் குறித்து தனக்கு தெரியும் என்றும் நிச்சயம் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதாக சொன்னார் ஆய்வாளர். அதன் பின் தமிழகத்தில் இருந்து வந்த தொடர் அழைப்புகளை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் தமிழர்கள் அனைவரையும் ஆந்திரா காவல்துறை விடுதலை செய்தது. இந்த ஆர்பாட்டத்தில் ஈடபட்ட தமிழர்கள் அனைவரும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் மென் பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியாவில் எங்கும் இலங்கை சுற்றுலா, பொருட்கள் மற்றும் சேவைகள் வணிகம் செய்ய கடை விரித்தாலும் தமிழர்கள் அங்கு சென்று போராட்டம் நடத்துவார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.  
















[vuukle-powerbar-top]

Recent Post