Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் கட்டிய கோவிலில் தமிழில் வழிபாடு செய்ய உதவிடுவீர் ! 
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும், இதனால் சமூகநீதியை நிலைநாட்டி விடுவோம் என கருணாநிதியால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டமும் 2006 ல் இயற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல்வேறு சாதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகம விதிகள், பூஜைகள் போன்ற கோயில் விதிகளில் பயிற்சியளிக்க 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.
அப்போதே மதுரையைச் சேர்ந்த சில பார்ப்பன அர்ச்சகர்களும், பட்டர்களும் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த தம்மைத் தவிர வேறு யாரும் சிலைகளைத் தொட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்ய தகுதி இல்லையென்றும், அப்படிச் செய்வதால் சிலை தீட்டுப் பட்டுப்போகும் என்றும் மீறி அப்படிச் செய்வதால் சிலையை விட்டும் கோயிலை விட்டும் சாமி வெளியேறி விடுவார் என்றும், என்னதான் மந்திரங்களையும், ஆகம விதிகளையும் படித்து இருந்தாலும் கருவறைக்குள் நின்று சிலையைத் தொடும் உரிமை தமக்கு மட்டுமே உரித்தானது என்றும் சொல்லி ஒரு தடையாணையைப் பெற்றனர்.
இந்த தடையாணையை நீக்கக் கோரி அர்ச்சக மாணவர்கள் மனித உரிமை கழகத்தின் துணையோடு உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தில் வாதாடும் போதும் பல இலட்சங்கள் செலவாகிறது. இந்த செலவை தமிழ் மக்களிடம் நிதி பெற்று தான் இதுவரை நடத்தி வருகின்றனர் இம்மாணவர்கள். இதனால் இவர்கள் இழந்தது அதிகம். பெரியார் சிலைக்கு மாணவர்கள் மாலை அணிவத்தது தொடர்ந்து இந்து முன்னணி பயங்கரவாதிகள் மாணவர் தலைவர் அரங்கநாதனை சரமாரியாக தாக்கினர். அதனால் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அர்ச்சக மாணவர்களுக்கு  ஒரு எதிர்காலம் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது . அர்ச்சக மாணவர்கள் வெற்றி பெறுவது என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றியாகும். நாம் இழந்த தமிழர் கோவில்களின் தமிழரை மீண்டும் நாம் காணலாம். தமிழ் மொழியில் மந்திரங்கள் கேட்கலாம். நமது உரிமை நிலைநாட்டப் படும். அதனால் தமிழர்கள் நாம் நம்மால் முடிந்த நிதி உதவி வழங்கி இம் மாணவர்களை வெற்றி பெற செய்யவேண்டும். நமது வெற்றி உடனே கிடைக்காவிட்டாலும் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவோம். 
அரங்கநாதன் அலைபேசி எண்: 9597855417
நன்கொடையை அளிக்க விரும்புகிறவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings


[vuukle-powerbar-top]

Recent Post