Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


இன்று ஆகஸ்ட் 23, 2013, வெள்ளிக்கிழமை கனடியத் தமிழ் சமூகமானது தன்னெழுச்சி கொண்ட மக்களால் கனடியத் திரை அரங்குகளில் ஒன்றான வார்டன் & எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் இருக்கும் சினிப்ளெக்ஸ் திரையரங்கில் மதியம் 11 மணி முதல் இரவு 10 மணிக்காட்சி வரை 4 காட்சிகளாக காட்சிப்படுத்த இருந்த நிலையில் கனடா வாழ் தமிழ் மக்கள் நூற்றுக் கணக்கானோர் இத்திரையரங்கின் முன்பாக அணிதிரண்டு திடீரென்று நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் இத்திரைப்படத்தின் காட்சிப்படுத்தல் தடுத்து நிறுத்தப்பட்டது.

சுமார் 15 படங்கள் திரையிடப்படும் பெரும் கட்டடமான இத்திரையரங்குக்கு வருகை தந்த பல்லின மக்களுக்கும் ஈழத்தமிழர்களின் நியாயமான இன விடுதலைப் போராட்டத்தை பற்றிய வரலாற்று உண்மைகளையும் இலங்கை அரசின் சூழ்ச்சிகளையும் தெளிவு படுத்தி பரப்புரை செய்யும் போராட்டமாகவும் எழுச்சியோடு திகழ்ந்தது.

இன்றைய பொழுதில் இந்த மெட்ராஸ் கபே திரைப்படம் கனடிய மண்ணில் பல திரையரங்குகளிலும் தமிழரின் வேண்டுகோளுக்கிணங்க திரையிடப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இந்த திரையரங்கில் தமிழிலும் மாலையில் இன்னொரு திரையரங்கில் (டன்டாஸ் & யங் சந்திப்புக்கு அருகில் உள்ள சினிப்ளெக்ஸ் திரையரங்கில்) இதே திரைப்படம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் திரையிடப்படுவதை அறிந்த மக்கள் தமிழில் வெளியாகும் இந்த திரைக்கு எதிராக இன்றைய நாளில் முதன்மையாக கூடி எழுச்சியோடு போராடி ஒற்றை தமிழரை கூட அரங்குள் உள்ளே சென்று படத்தை பார்க்க விடாமல் முற்றுகையிட்டு போராடினார்கள்.

ஒவ்வொரு காட்சியாக மக்கள் இன்றி இப்படம் இந்த இத்திரை அரங்கில் திரையிடப்படாது போனாலும் தாம் விநியோகத்தர்களோடு (இந்திய மலையாளி என அறிகிறோம்) செய்த ஒப்பந்தப்படி 1-2 வாரங்கள் இந்த படம் திரையிடப்படும் என திமிரோடு நிர்வாகிகள் பதில் அளித்தமை தமிழின உணவாளர்களை கொந்தளிக்க வைத்தது. சூழ்ச்சியோடு வெளியே இருந்த விளம்பரப்பலகையை  நீக்குவது போல் நீக்கினாலும் திரைப்படத்தின் திரையிடப்படும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில் இத்திரைப்படம் இந்த திரையரங்கில் யார் வந்தாலும் வராவிட்டாலும் நட்டப்படாலும் தொடர்ச்சியாக திரையிடப்படும் என கூறப்பட்ட நிலையில் கனடியத் தமிழர்கள்  போராட்டமும் வெற்றிபெறும் வரையில் நாட்கள் வாரங்கள் என கடந்தாலும் தொடரும் என மக்களால் உறுதி எடுக்கப்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டம் ஒருபுறம் தொடரப்படவுள்ள நிலையில் மின்னஞ்சல்கள், தொலைபேசி எனவும் சினிப்ளெக்ஸ் நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு  அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர் தமிழர்கள். நாளை மதியம் 11 மணியில் இருந்து 2 ஆம் நாள் மட்ராஸ் கபே திரைப்படத்துக்கு எதிரான முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கனடா வாழ் தமிழ் மக்களையும் இந்த தொடர் முற்றுகைப் போராட்டத்துக்கு வருமாறு வேண்டுகின்றனர கனடா தமிழ் சமூகத்தினர்.

 நன்றி சிவவதனி














[vuukle-powerbar-top]

Recent Post